இப்படி அந்தச் சூழலை பொறுத்துக் கொள்ள முடியாமல் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேறுவது பிக் பாஸில் தொடர்கதையாகிக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் கதை சொல்லியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, பல கதைகளையும் சொன்னார் பவா செல்லதுரை. அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகின. கடந்த வீக் எண்ட் எபிசோடில் கமல்ஹாசன் அதுகுறித்து விளக்கமும் கொடுத்தார்.
இந்நிலையில், `என்னால் இந்த வீட்டுக்குள் இனி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது பிக் பாஸ்!’ எனக் கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறியிருக்கிறார்.
பவா செல்லதுரை வெளியேறியது தொடர்பான உங்களது கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
+ There are no comments
Add yours