பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்து, நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் நடந்து வருகிறது. இதில், மக்களின் செல்வாக்குடன் சென்ற போட்டியாளர்களுள் ஒருவர், பவா செல்லதுரை. இவர், கடந்த வாரம் தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என கூறிவிட்டு வெளியேறினார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய பவா:
தமிழ் மக்களுக்கு பெரிய கதை சொல்லியாகவும், தமிழ் அறிஞராகவும் அறியப்பட்டவர், பவா செல்லதுரை. இவர், பிக்பாஸ் இல்லத்திற்குள் சென்ற இரண்டாம் நாளிலேயே சில ஹவுஸ் மேட்ஸ்களால் நாமினேட் செய்யப்பட்டார். “பிறருடன் வந்து ஜாலியாக இருக்கவில்லை, யாருடனும் பெரிதாக பேசுவதில்லை..” என்பவை அப்படி நாமினேட் செய்யப்பட்டதற்கு காரணமாக கூறப்பட்டது.
பவா செல்லதுரை கூறிய கதைகளும் அவர் கூறிய சில கருத்துகளும் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. இதையடுத்து, முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். அந்த எபிசோடில் பவா, “என்னை எவிக்ட் செய்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்..நானே ரொம்ப சந்தோஷமா போயிருப்பேன்…” என்று கூறினார். பின்னர், தனக்கு மன நிலையும் உடல் நிலையும் சரியில்லை இந்த வீட்டில் ஒரு நாள் கூட தன்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு, பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார் பவா.
பேஸ்புக் பதிவு:
பவா செல்லதுரை, தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னால் எழுந்த சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த சர்ச்சைகள் என்னென்ன என்பதையும், அவர் அதற்கு கொடுத்துள்ள விளக்கங்களையும் பார்ப்போம்.
மேலும் படிக்க | ஓவியா to அசீம்-பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்கள்..!
கல்வி குறித்த சர்ச்சை:
பிக்பாஸ் வீட்டில் உள்ள முக்கிய போட்டியாளரான ஜோவிகா, 9ஆம் வகுப்புடன் படிப்பை தொடராதது, இன்னொரு போட்டியாளரான விசித்ராவிற்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. அவர், அதை குத்திக்காட்டி பேசுகையில் இருவருக்கும் இடையே சூடான விவாதம் எழுந்தது. அப்போது பவா, “பி.ஹெச்.டி எல்லாம் ஒன்றும் சொல்லிக்கொடுக்காது..” என கூறினார். இது பிக்பாஸ் இல்லத்தில் மட்டுமன்றி, நிகழ்ச்சியை பார்ப்போர் பலரது வீட்டிலும் பெரிதாக வெடித்தது.
இதற்கு பவா பின்பவருமாறு விளக்கம் கொடுத்துள்ளார்:
“அந்த ஷோவில் நடந்தது ஜோவிகா என்ற அந்தப் பெண் கிட்டத்தட்ட விசித்திரா மேடத்தால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டார். குடும்பத்தோடு தெருவில் நிற்கும்போது எப்படி மேடம் மேத்ஸ் மண்டைக்கு ஏறும் எனக் கேட்டதற்கு பெருங்குரலெடுத்து கத்தியும், தமிழில் உன் பெயரை எழுதத் தெரியுமா-டீ உனக்கு என்று விசித்திரா மேடத்தால் மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட போது நான் ஜோவிகாவை சமாதானப்படுத்த போய் சொன்ன வார்த்தைதான் அது. எடிட் செய்யப்பட்ட அக்காட்சியை இப்போது பார்த்தபோது நான் முற்றிலும் தவறாக அர்த்தப்படுமாறு பேசி இருக்கிறேன் என்று தெரிகிறது. வகுப்பறைகளைத் தாண்டியும் கற்றுக் கொள்ள முடியும் என்பது மட்டுமே நான் சொல்ல வந்த கருத்து. அது தவறான அர்த்தத்தில் வெளிப்பட்டதை முழு மனதோடு ஒப்புக்கொண்டு என் மன்னிப்பை தமிழ் சமூகத்தின் முன்வைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
எச்சில் துப்புவது குறித்து எழுந்த சர்ச்சை:
ஒரு எபிசோடில், பவா செல்லதுரை கதை கூறிக்கொண்டிருக்கும் பாேதே பிரதீப் அழ ஆரம்பித்தார். அப்போது அவர் கூறியது, “நீங்கள் இந்த கேமின் இறுதி வரை என்னுடன் வர வேண்டும் என்று நினைக்கிறேன். ஆங்காங்கே நீங்கள் எச்சில் துப்புகிறீர்கள். அதை வைத்து இங்கு பலர் உங்களை நாமினேட் செய்ய வாய்ப்பிருக்கிறது. அதனால் அதை செய்யாதீர்கள் என்று கூறினார். அதற்கு பவா, “அது என்னுடைய இயல்பு, என்னால் அதை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது” என கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த சர்ச்சைக்கு பவா அளித்துள்ள விளக்கம்:
“மூன்றாம் நாள் நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே பிரதீப் அழ ஆரம்பித்தார். அத்தம்பியை ‘வாழ்’ திரைப்படம் பிரிவியூ பார்க்கும்போதே பார்த்திருக்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு ஏன் எனக் கேட்கிறேன்.சார் நீங்க கடைசிவரை எங்க கூட இருக்கனும் சார். இவங்க யாராவது நீங்க எச்சில் துப்புறீங்க, அதற்கடுத்து நாலைந்து காரணங்களை சொல்லி உங்களை அசிங்கப்படுத்திடுவாங்களேன்று கவலையா இருக்கு சார் என சொல்லும்போது அங்கிருக்கிற விசித்திரா மேடம் உட்பட அவர் எப்படா எச்சி துப்பினார்? என கோபப்பட்டார். அவர் அதன் பின் எங்க கூட ஜாலியா இருக்கமாட்டிறீங்க என சொன்னபோது அதை மறுத்துதான் நான் என் இயல்பை பிக்பாஸே சொன்னாலும், கடவுளே சொன்னாலும் மாத்திக்க முடியாது என்றேன்.அவைகள் எடிட் செய்யப்பட்டு எச்சித்துப்புதலுக்காக நான் அவ்விதம் எதிர்வினையாற்றினேன் என திரிக்கப்பட்டிருந்தது.
ஒரு நட்சத்திர விடுதிபோல வடிவமைக்கப்பட்டிருக்கும். அவ்வீட்டில் நாகரீகமுள்ள எந்த மனிதனும் எச்சில் துப்ப முடியாது. கேட்டால் அப்படித்தான் துப்புவேன் எனவும் சொல்ல முடியாது. வெளியில் இதை பல கோடி பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கடுத்த வார்த்தைகளில் அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் கவனமாக எடிட் செய்யப்பட்டிருப்பதை வெளியில் வந்த பிறகே நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours