“துணிவு’ படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு கலை இயக்குநர் மிலன் சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், பாதி வழியிலேயே உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கலை இயக்குநர் மிலனின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 2011 இல் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்திலும் கலை இயக்குநராக மிலன் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours