அனுபம் கெர், நானா படேகர், சப்தமி கவுடா, பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கோவிட் தொற்று மற்றும் கோவிட் கால மருத்துவ ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள், கோவிட் போன்றவற்றைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்தைச் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மோடி பாராட்டிப் பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இப்படத்தைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘தி வேக்சின் வார்’ குறித்துப் பேசிய யோகி ஆதித்யநாத், “‘தி வேக்சின் வார்’ என்ற ஒரு புதிய படம் வெளியாகி இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் அறிவியல் சாதனைகளை எடுத்துரைக்கிறது.
+ There are no comments
Add yours