Rhea Chakraborty: “ஜாமின் கிடைத்ததும் ஜெயிலில் நடனமாடினேன்!”- சுஷாந்த் சிங்கின் காதலி ரியா | Rhea Chakraborty responds to being called witch

Estimated read time 1 min read

இதில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபோர்த்தி மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்கும்போது போதைப்பொருள் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரியாவையும், அவரது அண்ணன் சோவிக் சக்ரபோர்த்தியையும் காவல்துறையினர் கைது செய்தனர். பல்வேறு விமர்சனங்களை ரியா சக்ரபோர்த்தி எதிர்கொண்டார். பலரும் அவரை “சூனியக்காரி’, ‘மாயக்காரி’ என்றெல்லாம் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ரியா நேர்காணல் ஒன்றில் இந்த விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.  

சுஷாந்த் - ரியா

சுஷாந்த் – ரியா

“என்னை சூனியக்காரி என்று அழைப்பது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அந்தப் பெயர் எனக்குப் பிடிக்கும். காரணம் அந்தக் காலத்தில் சூனியக்காரி என்பவர்கள் ஆணாதிக்கச் சமூகத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்கள். ஆணாதிக்கவாதிகளின் கருத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு என்று தனி கருத்து இருந்தது.  அதனால் அவர்கள் என்னை இவ்வாறு அழைப்பது கஷ்டமாக இல்லை. அதேபோல் என்னை இவ்வாறு அழைப்பவர்கள் ஆணாதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.   

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours