லியோ முதல் காட்சி எப்போது ? தொடரும் குழப்பம்…

Estimated read time 1 min read

‘லியோ’ முதல் காட்சி எப்போது ? தொடரும் குழப்பம்…

13 அக், 2023 – 11:40 IST

எழுத்தின் அளவு:


When-is-the-first-scene-of-Leo?-The-confusion-continues…

விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசு ஆணையை சரியாக புரிந்து கொள்ளாத பல ரசிகர்கள் வேண்டுமென்றே அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணி முதல் காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால், கோவை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தியேட்டர்களில் காலை 8 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளனர். படம் வெளியாகும் நாளைத் தவிர்த்து விட்டு அக்டோபர் 20 முதல் சில தியேட்டர்களில் முன்பதிவை நடத்தி வருகின்றனர்.

9 மணி முதல் காட்சிகளை நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் 8 மணி முதல் எப்படி காட்சிகளை நடத்த உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், படம் வெளியாகும் நாளில் அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்தத் தயாரிப்பு நிறுவனம் ‛விடாமுயற்சி’ செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours