Bigg Boss 7 Day 9: `சண்டைக்கு வாடா’ – `வைப்ரேஷன்’ விஷ்ணு; `ஸ்ட்ராட்டஜி’ பிரதீப் – சமாளிப்பாரா சரவணன் |Bigg Boss 7 Day 8 highlights

Estimated read time 1 min read

பிரதீப்பின் உக்கிரமான ஸ்ட்ராட்டஜி

‘நான் வீட்டை விட்டு போறேன்’ என்று அழும்பு செய்த மாயா, இப்போதோ ‘நான் இந்த வீட்டோடு மிங்கிள் ஆயிட்டேன். எல்லோருமே சொந்தக்காரங்களா ஆயிட்டாங்க..’ என்று கற்பனை கிரிக்கெட் டீம் மாதிரி ஒரு ரேஷன் கார்டு தயாரித்துக் கொண்டிருந்தார். பிடிக்காத மாமா பிரதீப்பாம். விஷ்ணு அண்ணனாம். சரவணன் முறை மாமனாம். விஜய்யும் அதே கேட்டகிரியாம். டீன் ஏஜ் மாணவர்கள் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு ‘மச்சான்.. அந்த ஃபிகர் என்னுது.. பச்சை சுரிதாரை வேணுமின்னா நீ சைட் அடிச்சுக்கோ’ என்று டீல் போட்டுக் கொள்வார்கள் அல்லவா? மாயாவும் பூர்ணிமாவும் கிளுகிளுப்பாக  பேசிக் கொண்டிருந்தது அப்படித்தான் இருந்தது. ஆக ஏதோ ரொமான்ஸ் கன்டென்ட் கொடுக்க தயாராகி விட்டார்கள் போலிருக்கிறது.

இன்னொரு பக்கம் வழக்கம் போல உக்கிரமாக ஸ்ட்ராட்டஜி யோசித்துக் கொண்டிருந்தார் பிரதீப். “ஜோவிகா கிட்ட உஷாரா ஆடணும்.. டேஞ்சரஸ் கோ்ள். நல்லா ஆடறா.. நிக்சன் பயலை இரக்கம் பார்த்து விட்டு வெச்சிருக்கேன். முதல்ல பணக்காரப்பசங்களை தூக்கிட்டு அப்புறம் ஏழைப்பசங்களுக்கு வரணும். விஜய்லாம் ஜிம் சொந்தக்காரன். விஷ்ணுவைப் பார்த்தா அவ்ள வசதி மாதிரி தெரியல’ என்றெல்லாம் பிரதீப் சொல்லிக் கொண்டிருந்தார். பிக் பாஸ் ஸ்ட்ராட்டஜி என்றாலும் கூட அதில் கம்யூனிச நோக்கில் எம்.ஜி.ஆர் படம் மாதிரி வர்க்க பேதம் பார்க்கும் பிரதிப்பீன் சமூக சிந்தனை குறித்து வியப்பாக இருந்தது. (என்ன இருந்தாலும் படிச்சவன்.. படிச்சவன்தாம்பா!)

மாயா - பூர்ணிமா

மாயா – பூர்ணிமா

‘அந்த விஷயத்தை நான் பண்ணலை.. பண்ணியிருந்தாலும் சரியா கேட்டிருக்காது’ என்று புலம்பிக் கொண்டிருக்கும் மாயா, பிரதீப்பிடம் சென்று எப்பவோ தனியாகப் பேசியிருக்கலாம். இப்போது அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. மாயாவும் பிரதீப்பும் பேசினார்கள்.

“இந்த மாதிரி மேட்டருக்கு எல்லாம் நான் சிரிக்க மாட்டேன். நான் அவ்ளோ கேவலமானவ இல்ல. என்னை அப்படியல்லாம் வளர்க்கல.. ஒருவேளை எனக்கு சரியா கேட்டிருக்காது.. என் பக்கம் தப்பு இருந்தா இப்பவே ஸாரி கேட்டுட்டு கிளம்பிடுவேன்’ என்றெல்லாம் தார்மீகமான ஆவேசத்துடன் பிரதீப்பிற்கு விளக்கம் தந்து கொண்டிருந்தார் மாயா. “நான் எதுக்கும் காண்டாக மாட்டேன். தெரிஞ்சுதானே வந்திருக்கோம். ஆனா இந்த ஒரு விஷயம்தான் என்னை அப்செட் ஆக்கிடுச்சு.. ஓகே.. நீ பேசலைல்ல.. விடு’ என்று பிரதீப் சொல்ல இருவரும் ஸாரி சொல்லி கட்டியணைத்துக் கொண்டு சமரசம் ஆனார்கள்.  “நீங்க ஒண்ணா இருந்தா பார்க்க நல்லாவே இல்லை” என்று ஐஷூ சொல்லியது பிக் பாஸின் குரல் மாதிரியே இருந்தது.

பெரிய வீட்டுக்கு எதிராக சின்ன வீடு சதியாலோசனை செய்து கொண்டிருந்தது. “அந்த வீட்ல எல்லோருமே வேஸ்ட். மணி ரொம்ப டிப்ளமாட்டிக்கா இருக்கான். கமல் சார் கேள்வி கேக்கற மாதிரியாவது ஏதாச்சும் செய்யணும்ல.. அடுத்த வாரம் நம்மள்ல ஒருத்தர் கேப்டன் ஆகணும்.. அவங்க எண்ணிக்கை அதிகமா இருக்கறதால ஓட்டு பயங்கரமாக குத்தறாங்க..” என்றெல்லாம் தீவிர உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours