Actor Vijay Net Worth Salary Per Movie Family Details Read In Tamil

Estimated read time 1 min read

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் பணக்கார நடிகராகவும் வலம் வருகிறார். இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அவர் எத்தனை கோடி சொத்ததுக்கள் வைத்துள்ளார் தெரியுமா..? 
சொத்து மதிப்பு:

நடிகர் விஜய், தான் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்த முதல் படத்திற்காக ரூ.500 சம்பளமாக பெற்றார். தற்போது அவரது லியோ படம் வெளியாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு படத்திற்கு 100 கோடிக்கும் கீழ் சம்பளம் வாங்கி வந்த விஜய், கடந்த 5 ஆண்டுகளில் தனது சம்பளத்தை பெரிதாக உயர்த்தியுள்ளார். வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ள ‘லியோ’ படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் வாங்கிய சம்பளம், ரூ.120 கோடியாம். இதையடுத்து, நடிகர் விஜய் தனது 68 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர், ரூ.150 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். தற்போது விஜய்யின் சொத்து மதிப்பு (Actor Vijay’s Net Worth) 56 மில்லியனாக உள்ளதாம். இது, இந்திய மதிப்பின் படி, ரூ.445 கோடி. 

ஆரம்ப கால சினிமா வாழ்க்கை:

தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன், நடிகர் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். தனது தந்தை 1984ஆம் ஆண்டு இயக்கிய ‘வெற்றி’ குழந்தை கதாப்பாத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இவர், தற்போது கோலிவுட்டின் ‘வெற்றி’ நாயகனாக வலம் வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் பல தோல்வியை சந்தித்தாலும், அவை அனைத்துமே இன்றளவும் 90ஸ் குழந்தைகள் மத்தியில் பசுமையான நினைவாக உள்ளது. 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!

தந்தை மூலம் திரையுலகிற்கு வந்தாலும், சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை தானே ஏற்படுத்திக்கொண்டார், விஜய். “எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய்..” என கூறி வந்தவர்கள், “விஜய்யின் தந்தைதான் எஸ்.ஏ.சந்திரசேகர்..” என்று கூறுகின்றனர். அந்த அளவிற்கு கோலிவுட்டில் புதிய சிகரத்தை தொட்டு விட்டார். 

Vijay

பன்முக திறமைகள்:

விஜய், நடிகராக மட்டுமன்றி கோலிவுட்டின் பன்முக திறமை கொண்ட கலைஞராகவும் வலம் வருகிறார். ஆரம்பத்தில் நடித்து மட்டும் வந்த இவர், அதன் பிறகு தான் நடிக்கும் படங்களில் தனக்கான பாடல்களை பாடவும் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மெலடி பாடல்களை பாடி வந்த இவர், அதன் பிறகு குத்து-ஸ்டைல் பாணியில் உள்ள பாடல்களுக்கு மாறினார். தமிழ் சினிமாவில் நன்றாக நடனம் ஆடும் திறமை கொண்ட நடிகர்களுள் விஜய்யும் ஒருவர். இவரை போல வேகமாகவும் உணர்ச்சியுடனும் தனித்துவமாகவும் வேறு எந்த நடிகரும் நடனமாடுவதில்லை என சில ரசிகர்கள் கருத்துகள் கூறுவதுண்டு.

நற்பணிகள்..

நடிகர் விஜய், சினிமாவில் வளர்ந்த காலத்திற்கு முன்பிருந்தே மக்களுக்காக பல நற்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ‘விஜய் மக்கள் இயக்கம்’ இன்று பல நிர்வாகிகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கெளரவித்தார், விஜய். 

Vijay

விஜய்யின் குடும்பம்..

நடிகர் விஜய், 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். 23 வயதாகும் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் குறித்த படிப்பினை படித்துள்ளார். இவர், தமிழ் திரையுலகில் இயக்குநராக களமிறங்க உள்ளார். இவரது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. திவ்யா சாஷாவும் அமெரிக்காவில் படித்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் இருக்காது..! அவை என்னென்ன தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours