சிறுவயதில் பழமொழிகள் குறித்தான வகுப்புகளில் பெரும்பான்மையாக நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் கதை, தங்க முட்டையிடும் வாத்தைப் பற்றித்தான். ‘பேராசை பெருநஷ்டம்’ என்கிற நீதிமொழியைத்தான் அந்தக் கதையின் இறுதியில் கூறியிருப்பார்கள். அந்த நீதிமொழியை மையப்படுத்தி ஹாரர் ஃபேன்டஸி படமாக இதை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குநர் ரஹி அணில் பர்வே.
1947-ல், மஹாராஸ்டிராவிலுள்ள ‘தும்பட்’ கிராமத்தில் தனது தாயாருடன் இருக்கிறார் விநாயக். அவரின் தாயார் தங்க நாணயத்திற்காகத் தனது வீட்டிலேயே ஒரு வயதானவரைப் பார்த்துக் கொள்வார். அதுமட்டுமின்றி தனது வீட்டிலேயே இறப்பைச் சந்திக்கவே முடியாத வயதான மூதாட்டி ஒருவருக்கு உணவளித்து வருவார். ஒரு நாள் விநாயக்கின் தாயார் பார்த்துக் கொண்ட வயதானவர் இறந்து விடுவார். அதனைத் தொடர்ந்து விபத்தாகத் தனது ஒரு மகனையும் அந்தத் தாய் இழந்து விடுவார். அதற்குப் பிறகு இறப்பைச் சந்திக்கவே முடியாத மூதாட்டியை விட்டுவிட்டு ‘தும்பட்’ கிராமத்தை விட்டே தனது இன்னொரு மகனுடன் (விநாயக்) சென்றிவிடுவார் அந்தத் தாய்.
வளர்ந்த பிறகு பேராசையால் மீண்டும் ‘தும்பட்’ கிராமத்திற்குச் செல்வார் விநாயக். அப்போது அங்கு இறப்பைச் சந்திக்க இயலாத மூதாட்டியின் மீது மரம் வளர்ந்து நிற்கும். அதுமட்டுமின்றி அந்த மூதாட்டியின் உடல் பாகங்களில் இதயம் மட்டும்தான் மீதமிருக்கும். அந்த மூதாட்டி “ஹஸ்தரிடம் (புதையல்) சிக்கிக் கொண்டால் அது என்னைப் போன்ற வடிவில் மாற்றிவிடும்” என எச்சரிப்பார். அதைத் தொடர்ந்து தனது வறுமைச் சூழலை நீக்க சில தந்திரங்களைப் பின்பற்றி அந்த ஹஸ்தர் புதையலைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டே இருப்பார் விநாயக். இந்தச் சூழ்ச்சியைத் தனது மகனுக்கும் சொல்லித் தந்து அவனுக்கும் பயிற்சி அளித்திருப்பார். இறுதியில் ஹஸ்தரின் வலையில் சிக்கிக் கொண்டு தனது மகனிடம் இறுதியாக எடுத்த புதையலை மட்டும் ஒப்படைத்துவிடுவார்.
+ There are no comments
Add yours