தீபாவளி ரேஸில் இணைகிறது விக்ரம் பிரபுவின் ‛ரெய்டு’
13 அக், 2023 – 10:52 IST

இந்த ஆண்டு தீபாவளிக்கு ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் நடித்திருக்கும் ஜிகர்தண்டா 2 ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு என்ற படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் இறுகப்பற்று என்ற படம் வெளியான நிலையில், அடுத்து ரெய்டு வர உள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான தகறு என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ரெய்டு படம். இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஸ்ரீதிவ்யா, ஆனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் இயக்கி உள்ளார், சாம் சி. எஸ் இசை அமைத்துள்ளார்.
+ There are no comments
Add yours