Tamil Actors Who Used Cuss Words In Movies Vijay Kamal Haasan Dhanush

Estimated read time 1 min read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலரில்  நடிகர் விஜய் பெண்களை குறிக்கும் ஒரு தகாத வார்த்தையை பேசினார். இது பெறும் சர்ச்சையாக வெடித்தது. விஜய் மட்டுமல்ல, படத்தின் கதாப்பாத்திரத்திற்காக பல பெரிய நடிகர்கள், தகாத வார்த்தைகளை பேசியுள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா? 

கமல்ஹாசன்:

ரசிகர்களால் ‘உலக நாயகன்’ என்று அன்புடன் அழைக்கப்படுபவர், கமல்ஹாசன். கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூத்த நடிகராகவும் கமல் பார்க்கப்படுகிறார். இவர், மணிரத்னம் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு நடித்திருந்த படம், ‘நாயகன்’. இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு பெரிய கூட்டத்திற்கு தலைவனாக வாழ்ந்திருப்பார். இந்த படத்திற்காக இவர், சில கெட்ட வார்த்தைகளை திரையில் பேசினார். மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘விக்ரம்’ படத்தில் “த்தா பாத்துக்கலாம்” என்ற வசனம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படத்தில், பல இடங்களில் இவர் தகாத வார்த்தைகளை உபயோகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ்:

கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் நாயகனாக இருப்பவர், தனுஷ். இவர், தனது 50வது படத்திலும் விரைவில் நடிக்க உள்ளார். இவருக்கென கோடிக்கனக்கான ரசிகர்களும் உள்ளனர். இவர், 2018ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘வடசென்னை’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் முழுவதும் பல தகாத வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். இவர் மட்டுமன்றி அந்த படத்தில் நடித்திருந்த அனைவருமே தங்களின் கதாப்பாத்திரத்திற்காக தகாத வார்த்தைகளை பேசியிருந்தனர். 

மேலும் படிக்க | வாய்பிளக்க வைக்கும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு-அடியாத்தி..இத்தனை கோடியா..!

ஜோதிகா:

சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த போது திரையுலகை விட்டு விலகிய நடிகை, ஜோதிகா. இவர், கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து ‘36 வயதினிலே’ படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். இதையடுத்து அவர் பாலா இயக்கத்தில் நடித்த படம், ‘நாச்சியார்’. இந்த படத்தில் அவர், காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதில், ஒரு சிறிய பெண்ணை ஒருவர் கற்பழித்த வழக்கை விசாரிக்கையில், இதை மூடி மறைக்குமாறு ஒருவர் அவரிடம் கூறுவார். அதற்கு அவர் ஒரு தகாத வார்த்தையை கூறி, ‘பளார்’ என்று அறை விடுவார். இந்த காட்சி, படம் வெளிவந்த போது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Tamil Actors

அஜித்குமார்:

கோலிவுட் திரையுலகில் உள்ள ஆக்‌ஷன் ஹீரோக்களுள் ஒருவர், அஜித்குமார். இவர், முதல் முறையாக நெகடிவ் ஹீரோவாக நடித்திருந்த படம், ‘மங்காத்தா’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். 2011ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அஜித் ஒரு தகாத வார்த்தையை பேசியிருப்பார், ஆனால், படத்தில் அந்த வார்த்தையை மியூட் செய்து விட்டனர். இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் அந்த மியூட் செய்யப்பட்ட வார்த்தை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அஜித், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய்:

நடிகர் விஜய், பெரும்பாலும் தனது படங்களில் மக்களுக்கு கருத்து சொல்லும் கதாப்பாத்திரங்களிலேயே நடித்திருப்பார். எந்த டைலாக்குகலையும் இவர் கொச்சையாக பேசியது கிடையாது. மாஸ்டர் படத்தில் வில்லன் பவானியை (விஜய் சேதுபதி) திட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் அவை அனைத்துமே மியூட் செய்யப்பட்டிருந்தன. தற்போது வெளியாகியுள்ள லியோ பட டிரைலரில் பெண்களை இழிவு படுத்தி பேசும் ஒரு ஆபாச வார்த்தையை கொச்சையாக பேசியுள்ளார் விஜய். இந்த காட்சி அல்லது இந்த வசனம் படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘விடாமுயற்சி’ படத்திற்காக அஜித்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours