Shahrukh Khan Dunki Movie Postponed From December 22 To Avoid Clash With Salaar | தள்ளிப்போகும் ஷாருக்கான் படம் அதுவும் இந்த நடிகர் படத்திற்காகவா

Estimated read time 1 min read

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் சாலார். டன்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் டாப்ஸி பன்னு நடித்துள்ளனர்.  ஷாருக்கான் சமீபத்தில் தனது அடுத்த படமான டன்கி டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறி இருந்தார். பிரபாஸின் அடுத்த படமான சலார் – பாகம் 1 படமும் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது.  இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி டன்கி டிசம்பர் மாதம் வெளியாகாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | சலார் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மீண்டும் எடுக்கும் படக்குழு! இதுதான் காரணமா?

டன்கி வெளியாகாது?

டன்கி படம் தள்ளிப்போக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிய இன்னும் கால அவகாசம் தேவைபடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இது குறித்தான அதிகார்வப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.  இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடியைத் தாண்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சமீபத்தில், ஜவான் வெற்றி விழாவில் பேசிய ஷாருக்கான் டன்கி படம் குறித்து கூறி இருந்தார்.  “ஜனவரி 26, குடியரசு தினத்தன்று பதான் வெளியானது, பின்னர் ஜன்மாஷ்டமி அன்று ஜவான் வெளியானது, இப்போது புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டதால், டன்கி வெளியிடுவோம்” என்று கூறி இருந்தார்.

சாலார் ரிலீஸ் தேதி

கடந்த மாதம், சாலர் படம் டிசம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.  தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் சலாரின் புதிய போஸ்டரைப் பகிர்ந்து இதனை அறிவித்து இருந்தது.  பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் பிருத்விராஜ் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னதாக செப்டம்பர் 28 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  படத்தின் பட்ஜெட் ரூ. 200 கோடியைத் தாண்டியதால், டிஜிட்டல் உரிமையை அதிகவிலைக்கு விற்க தயாரிப்பு நிறுவனம் யோசித்தது.  கிட்டத்தட்ட 55 முதல் 60 கோடி ரூபாய்க்கு விலைபோகும் என்று எதிர்பார்த்தனர்.  ஆனால் பிரபாஸின் முந்தைய படங்கள் எதுவும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.  இதன் காரணமாக எந்த ஓடிடி நிறுவனங்களும் படத்தை வாங்க முன்வரவில்லை.  இதுவும் படத்தை தள்ளி வைக்க ஒரு காரணமாக இருந்தது.

 

சலார் படம் கேஜிஎப் படத்தின் ஒரு பாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சலார் மற்றும் கேஜிஎப் இரண்டும் ஒரே கதைக்களம் என்றும், வேறு வேறு காலகட்டத்தில் நடைபெறும் விதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  சலார் படத்தில் இருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் வீடியோ இதனை உறுதிபடுத்தும் விதத்தில் உள்ளன.  ஆனாலும், படக்குழு இதுகுறித்து இன்னும் மவுனம் காக்கின்றன.

மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours