இதில் தேஐஸ் படம் வரும் அக்டோபர் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. போர் விமானம் தொடர்பான இப்படத்தை சர்வேஷ் மேவாரா இயக்கி இருக்கிறார். இதில் போர் விமானம் ஓட்டும் பெண் பைலட்டாக கங்கனா நடித்துள்ளார். தற்போது படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கங்கனா, படிப்பை முடிக்கும் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்கினால் சோம்பேறிகளையும் பொறுப்பற்றவர்களையும் ஒழிக்க முடியும். அதுமட்டுமின்றி அவர்களிடம் ஒழுக்கத்தையும் வளர்க்க முடியும்.
சீனா மற்றும் பாகிஸ்தான் மீது பாலிவுட் கலைஞர்கள் அன்பைப் பொழியும்போதும், கிரிக்கெட் வீரர்கள் அவர்களைக் கட்டியணைக்கும்போதும் நான் மட்டும்தான் அவர்களை எதிரிகளாக நினைக்கிறேனா, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகை எனக்கு மட்டும்தான் பெரியதாகத் தெரிகிறதா என்ற கேள்வியே எனக்குள் எழுகிறது. இந்த ‘தேஜஸ்’ படம் அதை உணர்த்தும்.
வீரர்கள் எல்லையில் சண்டையிடும் நேரத்தில், நாட்டு மக்கள் அவர்களின் முதுகுக்குப் பின்னால் பேசும்போதும், அவர்களைக் குறை கூறும்போதும் ஒரு ராணுவ வீரர் எப்படி உணர்கிறார் என்பதை இப்படம் காட்டும்” என்று பேசியிருக்கிறார்.
+ There are no comments
Add yours