Dhanush Aishwarya Rajinikanth Rumored To Be Reconcile Their Marraige

Estimated read time 1 min read

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், தனுஷ். இவரும், நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுமார் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தாங்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருவருமே தெரிவித்திருந்தனர். 

முடிவு பெற்ற 18 வருட திருமண வாழ்க்கை..! 

தனுஷ் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான படம், ‘காதல் கொண்டேன்’. இப்படத்தின் ப்ரீமியர் ஷோவின் போது சந்தித்துக்கொண்ட ஐஸ்வர்யா மற்றும் தனுஷ், நண்பர்களாக மாறியதாகவும் பின்பு அவர்களுக்குள் காதல் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 1 வருடம் வரை இவர்களது காதல் தொடர்ந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன், இருவருக்கும் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது, இருவருமே இளம் வயதினராக இருந்தனர். 

தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் கோ-பேரண்டிங் முறையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வளர்த்து வருகின்றனர். 

மீண்டும் திருமண வாழ்வில் இணைகின்றனரா..? 

தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்வதாக தெரிவித்ததை தொடர்ந்து, இருவருமே எங்கும் ஒன்றாக சேர்ந்து வெளியில் செல்லவில்லை. தனித்தனியாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து இருவருமே உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில், இந்த தகவலை நெட்டிசன்கள் பலர் உறுதிப்படுத்த தொடங்கினர். 

மேலும் படிக்க | உலகின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர்! யார் அவர்?

உண்மை என்ன..? 

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்து வாழ முடிவு செய்தார்களே அன்றி, அவர்கள் இருவரும் இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சினிமா வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவலில், அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதாக பரவி வரும் செய்தி முற்றிலும் பொய் என கூறப்பட்டுள்ளது. இருவரில், ஒருவர் வேறு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் இவர்கள் முறைப்படி விவாகரத்து செய்து கொள்வர் எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. தனுஷ்-ஐஸ்வர்யா ஒன்றிணைந்து வாழவில்லை என்றாலும் இருவரும் தங்களது குழந்தைகள் மீது மிகவும் பாசம் வைத்திருப்பதாகவும் ஒன்றாக சேர்ந்துதான் குழந்தைகளை வளர்ப்பதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விவாகரத்து பெற காரணம் என்ன..? 

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் விவாகரத்து பெற்ற காரணம் குறித்து பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது, தனுஷ் பல நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்பதுதான். இவருடன் படங்களில் சேர்ந்து நடிக்கும் நடிகைகளுக்கு அடுத்தடுத்து விவாகரத்து நடைப்பெற்றதையும் ரசிகர்கள் நோட்டம் விட்டு, அதற்கு காரணம் தனுஷ்தான் என்ற முடிவிற்கும் வந்தனர். ஆனால், தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் வெளியாகவில்லை. 

தனுஷ்-ஐஸ்வர்யாவின் அடுத்தடுத்த படங்கள்..! 

ஐஸ்வர்யா, தான் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த்தை கேமியோ ரோலில் நடிக்க வைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதையடுத்து அவர் தனது 50வது படத்தில் இயக்கி நடிக்க இருக்கிறார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். 

மேலும் படிக்க | சமந்தா to தனுஷ்-தென்னிந்திய திரையுலகை அதிர வைத்த விவாகரத்து செய்திகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours