“அழுதிருக்கேன். இந்தத் துறைங்கிறதைத் தாண்டி நம்மளுடைய வாழ்க்கையில் அடுத்து என்னப் பண்றதுன்னே தெரியாம ஒரு இடத்துல நிற்க வேண்டிய சூழல் எப்பவும் இருக்கும். நமக்கு ஏன் எதுவுமே நடக்க மாட்டேங்குதுன்னு தோணும். எதுவும் ஒர்க் அவுட் ஆகலையே என்கிற எண்ணமும் இருக்கும். அந்தச் சமயத்திலெல்லாம் உடைஞ்சு போகாம என்னோட எனர்ஜியை கெயின் பண்ணிப்பேன். எனக்கு ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. நான் சோசியல் மீடியாவுல ரொம்ப என்னோட பர்சனலை வெளிப்படுத்திக்க மாட்டேன். பர்சனல்னு ஒரு விஷயம் எல்லாருக்குமே வேணும். பிரைவசி ரொம்பவே முக்கியம். மனசு ஒரு மாதிரி இருந்தா ஏதாவது ஒரு கோயிலுக்குக் கிளம்பிப் போயிடுவேன். யோகி பாபுவோட அதே வெர்ஷன்தான் நானும்! டிரிப் போனா மறுபடியும் நமக்கு ஒரு எனர்ஜி வரும். மறுபடி ஓடுவோம். ஏதாச்சும் ஒண்ணு கிளிக் ஆகிடும். நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி பர்சனெல்லாம் கிடையாது. கொஞ்சம் தனிமை விரும்பிதான்.
இப்ப வாழ்க்கையில் ரெண்டு ஸ்டெப் எடுத்து வச்சிருக்கேன். ஒண்ணு ஒரிஜினல்ஸ்ல என்னை எதிர்பார்க்கலாம். அதுல ஒரே ஒரு ட்ரை கொடுக்கணும். ஆக்டிங்கிற்கு முடிவே கிடையாதுதானே! எனக்குக் கொடுத்த வேலையை நூறு சதவிகிதம் உயிரைக் கொடுத்தாச்சும் பண்ணிடுவேன். இன்னொன்னு, டெலிவிஷனிலும் பேசிட்டே இருக்காங்க. ஆண்டவன் நமக்கு என்ன தேவையோ அதை நிச்சயம் கொடுப்பாருன்னு நம்புறேன். அடுத்த ஸ்டெப் நல்ல ஸ்டெப் ஆக இருக்கும்னு நம்புறேன்!” என்றார்.
விஷ்ணுவின் முழுப் பேட்டியைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours