Gadar 2 (இந்தி) Zee5
அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல், அமீஷா படேல், உத்கர்ஷ் சர்மா, மனிஷ் வாத்வா, கௌரவ் சோப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Gadar 2.’ பீரியாடிக் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘zee5’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனியாகப் பிரிக்கப்பட்டபோது நடக்கும் காதலர்களின் பிரிவு மூலம் அப்போது நடந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் படமாக 2001-ல் வெளியானது ‘Gadar’ திரைப்படம். இதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இப்படம்.
முதல் பாகத்தில் காதல் மனைவியைப் பிரிந்து பாகிஸ்தானில் குடியமர்த்தப்படும் கணவன் தன் மனைவியையும் மகனையும் காண மீண்டும் இந்தியா வருகிறார். அதனால் நடக்கும் பிரச்னைகள், அரசியல் மற்றும் 1971-ல் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போர் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட கதைக்களம் இது.
Spider-Man: Across the Spider-Verse (ஆங்கிலம்) – Netflix
ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் கே. தாம்சன் ஆகியோர் இயக்கத்தில் ஷமேக் மூர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், ஆஸ்கர் ஐசக் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் `ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ (Spider-Man Across The Spider-verse). திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours