Nala Damayanthi Serial Video: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் நளதமயந்தி. பிரியங்கா நல்காரி நாயகியாக நடிக்க நந்தா மாஸ்டர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இந்த சீரியலில் பிரியங்கா தமயந்தியாக எல்லாருக்கும் குறைந்த விலையில் சுவையான உணவை கொடுத்து வர அவளால் அதே டி.நகர் பகுதியில் பெரிய ஹோட்டலை நடத்தி வரும் நளன் ஹோட்டல் பிசினஸ் நாளுக்கு நாள் டல் அடித்து கொண்டே வருகிறது. இதனால் தமயந்தியின் ஹோட்டலை விலைக்கு வாங்க முயற்சி செய்தும் முடியாமல் போக அவளை காதல் என்ற பெயரில் வீழ்த்த முடிவெடுக்கிறான். இதனால் தமயந்தி வாழ்க்கையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்க போகிறது என்பது ப்ரோமோ வீடியோ மூலமாக உறுதியானது.
மேலும் படிக்க- ராமாயண கதையில் சீதையாக சாய் பல்லவி-ராமனாக ரன்பீர் கபூர்..அப்போ ராவணன் யாருப்பா?
இந்த நிலையில் தற்போது இந்த சீரியலை ப்ரொமோட் செய்யும் விதமாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தமயந்தி தனது ஹோட்டலில் பரிமாறி கொண்டிருக்கும் போது தெய்வீக கடாச்சத்துடன் வரும் ரம்யா கிருஷ்ணன் அவள் பெயரை சொல்லி கூப்பிட நீ சாப்பாடு போட்டு பசியை போக்குற, நான் மனசு வலியை போக்குறேன், நீயும் ஒரு அன்னலட்சுமி தான் என்று சொல்கிறார்.
அக்டோபர் 9 முதல் | நளதமயந்தி. #NalaDamayanthi #NewSerial #RamyaKrishnan #PriyankaNalkari #Nanda #ZeeTamilpromo #promo #ZeeTamil @meramyakrishnan pic.twitter.com/VwfzLcAzPX
— Zee Tamil (@ZeeTamil) September 28, 2023
மேலும் இதனால் உனக்கு நிறைய பிரச்சனைகள் வர போகுது என்று சொல்ல தமயந்தி எனக்கு துணையாக என் அம்மாவும் நான் வணங்குற அம்மனும் இருக்கும் போது எனக்கு என்ன பிரச்சனை வர போகுது என்று கேட்க நளன் என்ட்ரி கொடுக்கிறான். எதையும் எதிர்பார்க்காமல் நல்லதை மட்டுமே பண்ற தமயந்திக்கு அவ எதிர்பார்க்காத ஏமாற்றம் ஒன்று காத்திருக்கு. காலம் மாறிட்டு இருக்கு, நம்ம தமயந்தியோட பாதையும் மாறிடுமா? வாங்க பார்க்கலாம். நளதமயந்தி புத்தம் புதிய சீரியல் வரும் அக்டோபர் 9 முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அந்த ப்ரோமோ முடிவடைகிறது.
ரம்யா கிருஷ்ணன் இடம்பெறும் இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் படிக்க- ரசிகர்களை இறுக்கமாக பற்றியதா ‘இறுகப்பற்று’ திரைப்படம்..? விமர்சனம் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours