பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வரும் முன்னாள் போட்டியாளர் வேல்முருகனிடம் பேசியபோது,
“நான் போட்டியில கலந்துகிட்ட போது மட்டுமல்ல வெளியில வந்த பிறகுமே அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரை ஒரு தடவையாச்சும் பார்க்க முடியாதானு நினைச்சிருக்கேன். முயற்சி செய்தப்போ, அவரையெல்லாம் நீங்க நேர்ல பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. என்னதான் சொல்லுங்க, அந்த காந்தக்குரல் நிகழ்ச்சிக்குப் பெரிய ப்ளஸ். ஆனா, இப்பவும் ஷோ பாக்குறேன். ஸ்மால் பாஸ்னு ஒரு சத்தம் கேக்குது. பக்கத்துல இருக்கிற கன்டஸ்டன்ட் பேசுற மாதிரி இருக்கு. இப்படி இருந்தா போட்டியாளர்களுக்கு அந்தக் குரல் மேல ஒரு பிடிப்போ, ஈர்ப்போ இருக்காது. அலட்சியமா எடுத்துப்பாங்க. அதுதான் நடந்துட்டு இருக்குனு நினைக்கிறேன் வித்தியாசமா இருக்கும்னு நினைச்சு இந்த ரெண்டு வீடு கான்செப்ட் கொண்டு வந்திருக்காங்க. ஆனா பிக் பாஸ் அதே குரலா இருந்தாலே நல்லா இருந்திருக்குமோனு தோணுது’’ என்கிறார்.
நிகழ்ச்சியைப் பொறுத்தவரை குறைந்தது பத்து நாட்கள் ஆன பிறகே ரிசல்ட் தெரியவரும். ஸ்மால் பிக் பாஸ் அதற்குள்ளேயே சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார். அதேநேரம் இரண்டாவது வீட்டிலிருக்கும் சில இளம் போட்டியாளர்கள் அந்த ஸ்மால் பாஸுடன் மிங்கிளாகத் தொடங்கியுள்ளனர் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
ஸ்மால் பாஸ் பிக் பாஸின் இன்னொரு வீட்டில் தாக்குப்பிடிப்பாரா? அல்லது பிக் பாஸ் ஸ்மால் பாஸுக்கும் சேர்த்து ஆர்டர் போடுகிற ஒரு நிலைமை வருமா என்பது போகப் போகத் தெரியும்.
ஸ்மால் பாஸ் குறித்து உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
+ There are no comments
Add yours