தென் இந்திய மொழிப் படங்களில் அறிமுகமாகி பாலிவுட்டில் வெற்றிக்கொடி கட்டியவர் நடிகை ரேகா. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை ரேகா, இப்போது மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.
நடிகர் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் வீடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தனி பங்களாவில் வசிக்கும் ரேகா இப்போது படங்கள் எதிலும் நடிக்கவில்லை.
பழம்பெரும் நடிகைகளாக ஜெயாபச்சன், ஷபானா ஆஸ்மி போன்ற நடிகைகள் கூட இன்னும் நடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ரேகா மட்டும் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே வாழ்கிறார். ஆனால், பேஷன் ஷோ அல்லது வர்த்தக நிறுவனங்களின் பிரமோனஷல் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் ஐந்து முதல் ஆறு கோடி வரை கட்டணமாக வசூலிக்கிறார். தனது வீட்டிற்குள் ஏராளமான மரங்கள் மற்றும் செடிகளை வளர்க்கிறார். பெரும்பாலான நேரத்தை இயற்கையோடு திறந்த வெளியில் இந்த மரங்களுடன்தான் ரேகா கழிக்கிறார்.
யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு தனிமையில் வாழ்ந்தாலும் ரேகாவிடம் ஏராளமான ஆடம்பர கார்கள் இருக்கிறது. ரூ.2.17 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார், ரூ.1.63 கோடி மதிப்பிலான ஆடி ஏ8 ரக கார், ஒரு ஹோண்டா சிட்டி, பி.எம்.டபிள்யூ எலக்ட்ரிக் கார், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற ஆடம்பர கார்கள் இருக்கின்றன.
அதோடு அவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டுப்புடவைகள் வைத்திருக்கிறார். அவரது வீடு மட்டும் 100 கோடி இருக்கும் என்று செய்திகள் கூறுகிறது.
அதோடு ஏராளமான சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளதாகவும், அதன் மூலம் அவருக்கு கணிசமான வாடகை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
அவருடம் 332 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு தென் இந்தியாவிலும் ஒரு வீடு இருக்கிறது. அவர் எப்போதும் வெளியில் வரும்போது மகாராஷ்டிரா முறைப்படி உடை அணிந்து வெளியில் வருவது வழக்கம்.
எப்போதும் தனிமையில் வாழ விருப்பப்படும் நடிகை ரேகாவின் வீட்டை அவ்வளவு எளிதியில் யாரும் நெருங்கிவிட முடியாத அளவுக்கு பாதுகாப்பு போட்டு வைத்திருக்கிறார். இத்தனை சொத்துபத்துகளுடன் வாழ்ந்து வருபவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா?
+ There are no comments
Add yours