திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பு, தமிழ் சமூகத்திற்கு கல்வி மற்றும் அறிவை வழங்குவதற்கான அரசாங்கத்தின் சிறப்புத் திட்டமான அறிவொளி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். புதுமுக வகுப்பு வரை கல்வி பயின்ற வேல ராமமூர்த்தி இந்திய ராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். பின்னர் இவர் அஞ்சல் நிலையத்திலும் பணயாற்றி இருக்கிறார்.
`மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். `சேதுபதி’, `கிடாரி’ போன்ற திரைப்படங்களில் இவர் நடிப்பு பலாராலும் பாராட்டப் பெற்றது. வேல ராமமூர்த்தி எதிர்மறை வேடங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார். `கொம்பன்’, `ரஜினி முருகன்’, `அப்பா’, `அண்ணாத்த’ போன்ற பிரபலமான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்திருந்த படமொன்றின் காட்சி வைரலாகிறது. அதில் இவர் சாப்பிடுகிற போது, `இளந்தாரிப்பய!’ என இவர் பேசிய வசனம் இணையத்தில் வைரலானது. மாரிமுத்துவுக்கு எப்படி `ஏய் இந்தாம்மா!’ என்கிற வசனம் வைரலோ, வேல ராமமூர்த்திக்கு அதுபோல `இளந்தாரிப்பய!’ வசனம். ஒருவேளை அதற்காக கூட இவர் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.
+ There are no comments
Add yours