New Movies And Web Series Releasing On October 2023 In Bollywood | அக்டோபர் மாதம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் மிஸ் பண்ணாம பாத்துருங்க

Estimated read time 1 min read

கொரோனா தொற்றுநோய் உலகையே திருப்பி போட்டதால் மக்கள் நடமாட்டம் பொதுவெளியில் குறைந்தது.  இதனால் திரையரங்குகளும் காலியாக இருந்ததால் சினிமா உலகத்தை மிகவும் பாதித்தது, ஆனால் இப்போது அனைத்தும் இயல்பு நிலைக்குத் மாறியுள்ளன. பாலிவுட் சினிமா அதன் ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திக்கும் படி பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கொடுத்து வருகிறது. பாலிவுட்டில் வெளியாகும் நல்ல படங்களை பார்க்க விரும்பினால் இந்த மாதம் உங்களுக்கு ஜாக்பார்ட் தான். அக்டோபர் மாதம் பாலிவுட்டில் பல புதிய படங்களும், இணைய தொடர்களும் OTT மற்றும் திரையங்கிற்கு வர உள்ளன. 2023 அக்டோபரில் வெளிவரவிருக்கும் சில OTT தொடர்கள், திரைப்படங்கள் பற்றிய விவரம்.

மேலும் படிக்க | இதுவரை 2023ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

அக்டோபர் மாதம் வெளியாக உள்ள திரைப்படங்கள்

Mumbai Diaries Season 2 – இந்த சீசன் மும்பையில் ஒரு இயற்கை பேரழிவு ஏற்பட்டால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்து கூறுகிறது. அக்டோபர் 6 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. கொங்கோனா சென் ஷர்மா, மோஹித் ரெய்னா, டினா தேசாய், ஸ்ரேயா தன்வந்தரி, சத்யஜீத் துபே, நடாஷா பரத்வாஜ், ம்ருண்மயி தேஷ்பாண்டே மற்றும் பிரகாஷ் பெலவாடி நடித்துள்ளனர்.

Sultan of Delhi – பேராசை, துரோகம், தைரியம் மற்றும் அதிகாரத்திற்கான இறுதிப் போராட்டம் ஆகியவற்றை சுற்றி இந்தத் தொடரின் கதை நகர்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடர் அக்டோபர் 13 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும்.  தாஹிர் ராஜ் பாசின், அஞ்சும், வினய் பதக், நிஷாந்த், அனுப்ரியா கோயங்கா, மௌனி ராய், ஹர்லீன் சேத்தி மற்றும் மெஹ்ரீன் பிர்சாதா ஆகியோர் நடித்துள்ளனர்.

Mission Raniganj – 1989 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச் நிலக்கரி வயல் சரிவின் போது 65 சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஜஸ்வந்த் சிங் கில் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இப்படம் அக்டோபர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அக்‌ஷய் குமார், பரினீதி சோப்ரா, குமுத் மிஸ்ரா, பிரவன் மல்ஹோத்ரா, ரவி கிஷன், லங்கேஷ் பரத்வாஜ், ராஜேஷ் ஷர்மா, அனந்த் மகாதேவன், திபியேந்து பட்டாச்சார்யா, வீரேந்திர சக்சேனா, ஸானந்த் வர்மா, ஆரிஃப் ஜகாரியா, குஷ்பூ அத்ரே, ஹிவ்மா அவாஸ்தி, ராஜ் அவாஸ்தி, வருண் படோலா, ஆஷா படேல், ஜமீல் கான், மனோஜ் ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Thank You For Coming – குடும்பக் கூட்டத்தில் மீண்டும் ஒன்று சேரும் ஐந்து பெண் சிறந்த தோழிகளைப் பற்றியது மற்றும் அவர்களின் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கடந்து அவர்களின் நட்பின் உண்மையான ஆழத்தை ஆராயும் கதை இது. இந்த மல்டிஸ்டாரர் படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகிறது.  பூமி பெட்னேகர், ஷெஹ்னாஸ் கில், குஷா கபிலா மற்றும் ஷிபானி பேடி நடித்துள்ளனர்.

Tejas – இந்தத் திரைப்படம் விமானப்படை விமானியான தேஜாஸ் கில்லை பற்றியது.  எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு, நம் தேசத்தை அயராது காக்கும் வீரம் மிக்க வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் ஆழமான பெருமையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படம் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகிறது.  கங்கனா ரனாவத், அன்ஷுல் சௌஹான், வருண் மித்ரா, மிர்கோ குவைனி, வீணா நாயர், அனுஜ் குரானா, அர்னோப் கான் அகிப், ரோஹத் கான், ஆகாஷ் அஹுஜா, ஓஸ்குர் கர்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.  

Ganpath: A hero is born – இந்த ஆக்‌ஷன் திரைப்படம் மக்களுக்காக போராடும் ஒரு ஹீரோவைக் பற்றியது. இந்த படம் தசராவுடன் இணைந்து 20 அக்டோபர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  அமிதாப் பச்சன், டைகர் ஷெராஃப், கிருத்தி சனோன், எல்லி அவ்ராம், ரஹ்மான், ஜமீல் கான், கிரிஷ் குல்கர்னி, ஸ்ருதி மேனன், ஜியாத் பக்ரி ஆகியோர் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | லியோ to ரத்தம்- அக்டோபர் மாதம் வெளியாகும் தமிழ் படங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours