கிட்டத்தட்ட ரூ.500 கோடிக்கு மேல் பட்ஜெட் போட்டு இருக்கிறார்கள். சூர்யாவை ஒப்பந்தம் செய்த கையோடு பொன்னியின் செல்வன் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்து விட்டார்கள். இதற்காக இயக்குநர் ஓம்பிரகாஷ் மெஹ்ராவும், ரவிவர்மனும் காஷ்மீர் லடாக் போயிருக்கிறார்கள். நடுங்கும் குளிரில் பத்து நாட்களுக்கு மேல் தங்கி லொகேஷன் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். படம் 2024 ஜூலையில் ஆரம்பமாகிறது. பிற ஆர்டிஸ்ட்களின் தேர்வு, பிலிம் டிசைன் என ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மகாபாரதம் மற்றும் அதன் சூழல்கள் நடைபெறும் பழம்பெரும் அஸ்தினாபுரத்தை மறுபடியும் நிர்மாணிக்கப் போகிறார்கள். பிரபல எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் ஸ்கிரிப்ட்டை உருவாக்கியிருக்கிறார். சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ அனேகமாக இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. நவம்பரில் சுதா கொங்கராவின் ஆக்சன் டிராமா துல்கரோடு இணைந்து நடிக்கிறார். இது துரித கால தயாரிப்பு. பிறகு வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ அதற்குப் பிறகு ‘கர்ணா’ தான்.
+ There are no comments
Add yours