பிக் பாஸ் நிகழ்ச்சி 2017ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக விஜய் டிவியில் அறிமுகமான நிகழ்ச்சி. ஆறு சீசன்களைக் கடந்து தற்போது ஏழாவது சீசன் தொடங்கியுள்ளது.
முதல் சீசனிலிருந்தே நிகழ்ச்சியில் பிக் பாஸாக ஒலிக்கும் அந்த வாய்ஸ் யாருடையதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பிக் பஸ் ரசிகர்களிடம் இருந்து வந்தது. பலரது பெயர்களை சமூக வலைதளங்கள் விவாதித்து வந்தன.
‘ஓவியா, மைக்கை மாட்டுங்க’, ‘ஜூலி, நீங்க கொடுத்த டாஸ்க்கை சரியா பண்ணல’, ‘அசீம், கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க’ என்றெல்லாம் கணீர் குரலில் ஒலித்த அந்தக் குரல் யாருடையது என்பதை முதன் முதலாக வெளியுலகத்துக்குத் தெரிவித்தது ஆனந்த விகடன் தான்.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தற்சமயம் மும்பையில் வசித்து வரும் நடிகர் கம் டப்பிங் ஆர்ட்டிஸ்டான சாஷோ என்கிற தகவல் சில வருடங்களுக்கு முன் ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.
தற்போது இந்த 7வது சீசனில் வழக்கமாக இல்லாமல் இரண்டு பிக் பாஸ் வீடுகள். நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்படுபவர்களை பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே இருக்கும் இன்னொரு சின்ன வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அங்கும் பிக் பாஸ் குரல் போலவே இன்னொரு குரல் ஒலிக்கிறது.
நிகழ்ச்சியின் முதல் நாளே வெளியேற்றத்துக்கான நாமினேஷனில் இடம் பிடித்த ஆறு பேர் அந்த சின்ன வீட்டுக்குச் சென்ற போது அவர்களை வரவேற்றார் சின்ன பிக் பாஸ்.
வழக்கம் போல ‘யாருப்பா இந்த சின்ன பிக் பாஸ்’ எனப் பலரும் தேடத் தொடங்கினோம். நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்படி, சின்ன பிக் பாஸ் வீட்டுக்குள் ஒலிக்கும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரது பெயர் அரவிந்தன்.
சென்னையைச் சேர்ந்தவர். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான இவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர் என்கிறார்கள். தற்போது தீவிரமான சினிமாத் தேடலில் இருந்து வருபவரை இந்த சீசனில் வாய்ஸ் கொடுக்கக் கூட்டி வந்திருக்கிறார்கள்.
+ There are no comments
Add yours