நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தை அடுத்து, ரஜினிகாந்த் அவரது 170ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.
தலைவர் 170:
ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ் பெற்ற டி.ஜே.ஞானவேல் ராஜா அடுத்து இயக்க இருக்கும் படம், தலைவர் 170. ரஜினி ஹீரோவாக நடிக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதையடுத்து, படம் குறித்த அப்டேட்டுகள் தற்பாேது ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இன்று, இந்த படத்தில் நடிக்கும் இரண்டு நாயகிகளை படக்குழு அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இரண்டு நாயகிகள்…
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகிகளுள் ஒருவர், துஷாரா விஜயன். இவர், முதன் முதலாக ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாரியம்மா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அடுத்து இவர் நடித்த படம், ‘நட்சத்திரம் நகர்கிறது’ இந்த படத்தில் இவர் ரெனே என்ற கதாப்பாத்திரத்தில் நடத்து பிரபலமானார். அடுத்து அர்ஜுன் தாஸ் உடன் ‘அநீதி’ படத்தில் நடித்தார். சினிமாவிற்கு வந்து வெகு விரைவிலேயே, இவருக்கு நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பினை லைகா நிறுவனம் இன்று வெளியிட்டது.
மேலும் படிக்க | தலைவர் 170 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!
துஷாரா விஜயனை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் இணைந்துள்ள நடிகை, ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்த இவர், ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். தமிழ் சினிமா இவரை அன்புடன் வரவேற்றதால் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ராகவா லாரன்ஸ் போன்ற ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றி கதாநாயகிகளின் லிஸ்டில் இணைந்தார். தற்போது தலைவர் 170 படத்தில் இவரும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
ரஜினிக்கு ஜோடி இவரா..?
தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒரு கதாநாயகி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர், துஷாராவோ, ரித்திகாவோ அல்ல. மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கும் மஞ்சு வாரியரை, இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க இருக்கிறார்களாம். மஞ்சு வாரியர், தனுஷிற்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட, தொடர்ந்து தமிழில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனாலும், அவர் அஜித் ஹீரோவாக நடித்திருந்த ‘துணிவு’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தார். இதையடுத்து சூப்பர் ஸ்டாருடன் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளதா அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரஜினியின் அடுத்த படம்..
டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தை அடுத்து ரஜினிகாந்த், தனது 171வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்த சன் பிக்சர்ஸ் நிறவனம் தயாரிக்கிறது. இது குறித்த தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பிருந்தே கசிந்து வந்த நிலையில், அதிகாரப்பூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து லியோ படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து அவர் இயக்க இருக்கும் படம்தான், ரஜினியின் 171வது படம். இதன் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் படிக்க | இதுவர ஜெயிலர், இனிமே… அலப்பற கெளப்பும் ‘தலைவர் 170’ – புதிய அப்டேட்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours