சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், இந்த நிறுவனம் பல பிரமாண்ட மற்றும் தரமான படங்களைத் தயாரித்துள்ளார். பொன்னியின் செல்வன், 2.0 போன்ற மிக முக்கிய படங்களை தயாரித்துள்ளனர். அவர்களின் சமீபத்திய வெளியீடுகளின் தொடர்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ‘லால் சலாம்’ திரைப்படம் தயாராகி வருகிறது. ‘லால் சலாம்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இயக்குனர் பொறுப்பேற்றுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினி ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு கேரக்டர் போஸ்டரை வெளியிட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
A great bVishal) October 1, 2023
மேலும் படிக்க | மாமன்னன் படத்தில் நடிக்க வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் பிரபாகர் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கி திருவண்ணாமலையில் முதல் ஷெட்யூலை முடித்தது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார். ஜி.கே.எம். லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் தமிழ் குமரன் மற்றும் குழு தற்போது லால் சலாம் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பொங்கல் பண்டிகை தினத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் அயலான் படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே தீபாவளி தினத்தில் வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்நிலையில், ரஜினியின் லால் சலாம் படமும் தற்போது பொங்கல் வெளியீடு என்று கூறி இருப்பது படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் வெளியாக இருந்த நிலையில், அதே தேதியில் ஜெய்லர் படம் வெளியானது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தன் படத்தை ரஜினி படத்துடன் மோதாமல் ஜுலை மாதமே வெளியிட்டார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் படம் வெளியாகும் அதேதேதியில் ரஜினி படம் வெளியாகிறது.
இந்நிலையில், மீண்டும் அயலான் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் அடையுமா அல்லது அதே தேதியில் வெளியாகுமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இன்று அயலான் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிடுவதாக கூறியுள்ளது. அநேகமாக படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சையின்ஸ் ஃபிக்ஷன் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள அயலான் திரைப்படம் 4 மொழிகளில் வெளியாகிறது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளதால் ரசிகர்களுக்கு இப்படம் மீது அதீத எதிர்ப்பார்ப்பு உள்ளது. அடுத்து, சிவகார்த்திகேயன் அவரது 21 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
மேலும் படிக்க | ஓவியா to அசீம்-பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours