தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டு ஷோக்களில் மிகவும் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த முறை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல புதுப்புது ரூல்ஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பிக்பாஸ் சீசன் 7:
2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது அதன் 7வது சீசனில் உள்ளது. வழக்கம் போல நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் பிக்பாஸ் இல்லம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரே இல்லத்தில் தங்கும் ஹவுஸ் மேட்ஸ், இந்த முறை இரண்டு வீடுகளில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வந்த முதல் நாளிலேயே போட்டியாளர்களுக்குள் விவாதம் வரும் வகையில் ‘கேப்டன்ஸி’ டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போதே, வந்த சில மணி நேரத்தில் போட்டியாளர்கள் சிலர் காரசாரமாக பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
ஸ்மால் பாஸ் வீடு:
பிக்பாஸ் இல்லத்திற்குள் இருக்கும் இன்னொரு இல்லத்திற்கு ‘சின்ன பிக்பாஸ் வீடு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் கேப்டனை பெரிதாக ஈர்க்க தவறியவர்களை நாமினேட் செய்து, சக போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைத்துவிட்டனர். வினுஷா தேவி, ரவீனா, பவா செல்லதுறை, ஐஷூ, அனன்யா, நிக்ஸன் உள்ளிட்டோர் அந்த இல்லத்தில் தற்போது இருக்கின்றனர். இப்படி வாரா வாரம், கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிலர் இந்த ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அவர்களில் சிலரை பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் நாமினேட் செய்வர், அதே போல பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் சிலரை ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் நாமினேட் செய்ய உள்ளனர். இன்றைய எபிசோடில் இந்த நாமினேஷன் குறித்து காண்பிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க | வந்த இரண்டே நாளில் ஆறு பேரை வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ்
நாமினேட் செய்யப்பட்டவர்கள்:
பிக்பாஸ் ப்ரமோவில் ஜோவிகா, ஐஷுவால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். பிரதீப் ஆண்டனி, மிக்ஸனால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். கூல் சுரேஷ் பவா செல்லதுரையை நாமினேட் செய்தார். ஜோவிகா, அனுஷாவை நாமினேட் செய்தார். பவா செல்லதுரை கூல் சுரேஷை நாமினேட் செய்தார். முழு நாமினேஷன், எபிசோட் வெளியான பிறகு தெரியும். வார இறுதியில் வெளியேற்றப்பட இருக்கும் அந்த போட்டியாளர் யார் என்பது, மக்கள் அளிக்கும் வாக்குகளை வைத்துதான் தெரியும்.
பிக்பாஸ் போட்டியாளர்கள்..
பிக்பாஸில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். நடிகராக இருந்த இவர், தற்போது பல படங்களுக்கு ப்ரமோட் செய்து பெரிய செலிப்ரிட்டி ஆகி விட்டார். இவரை அடுத்து களமிறங்கியவர், பூர்ணிமா. இவர், யூடியூப் செலிப்ரிட்டியாக இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரவீணா தஹா, நடிகை விசித்ரா ஆகியோரும் இதில் போட்டியாளர்களாக உள்ளனர். அருவி, டாடா பாேன்ற படங்களில் நடித்த பிரதீப் ஆண்டனி இதில் முக்கிய பங்கேற்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னத்திரை நடிகர்களான விஷ்ணு, குமரன், வினுஷா தேவி ஆகியோரும் போட்டியாளர்களுளாக இருக்கின்றனர். கதை சொல்லி பவா செல்லதுரை, நடன கலைஞர்கள் விஜய், ஐஷூ ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். வனிதாவின் மகள் ஜோவிகா வந்த முதல் நாளே கெத்து காட்டினார். பாடகர் யுகேந்திரன் வாசுதேவன், நடிகை மாயா கிருஷ்ணன், நடிகை அக்ஷயா உதயகுமார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர். ராப் பாடகரும் பாடல் ஆசிரியருமான மிக்ஸன் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில் முதல் வாரத்திலேயே வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பது இந்த வார இறுதியில் தெரிந்து விடும்.
மேலும் படிக்க | பிக்பாஸ் வாய்ஸிற்கு பின்னால் இருக்கும் மர்ம நபர் யார்? அட ‘இந்த’ நடிகரா அது..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours