அசீம் தான் பிரச்னையா? -ராதிகா ப்ரீத்தி விளக்கம்
30 செப், 2023 – 13:36 IST
பூவே உனக்காக தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்து வந்தார். சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ராதிகா ப்ரீத்தி திடீரென விலகினார். இதற்கு அசீம் தான் காரணம் என்று சக நடிகர்கள் பலரும் பேட்டி கொடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா ப்ரீத்தி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘அசீமுக்கும் எனக்கும் பலமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை வந்துள்ளது. அதை மறுநிமிஷமே மறுந்துவிடுவோம். அசீம் எனக்கு நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது. ஆனால், எங்கள் முதுகுக்கு பின்னால் எங்களை தவறாக பேசினார்கள்’ என கூறியுள்ளார்.
மேலும், சீரியலை விட்டு விலகியதற்கான காரணங்களை அடுக்கிய அவர், ‘ஒன்றரை வருடம் சம்பளமில்லாமல் நடித்தேன். உடல் அளவிலும் பிரச்னை இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் டாய்லட் வசதி செய்து தரவில்லை. அங்கிருக்கும் வீடுகளில் ரிக்வஸ்ட் செய்து தான் டாய்லட் பயன்படுத்தினோம்’ என இதுபோல் பல கொடுமைகளை சீரியலில் நடிக்கும் போது அனுபவித்ததாக ராதிகா ப்ரீத்தி கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours