Actor Senthil Son Manikanda Prabhu Interview Details In Tamil

Estimated read time 1 min read

80 மற்றும் 90களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர், செந்தில். தமிழ் சினிமா என்றால் நினைவிற்கு வரும் சில கலைஞர்களுள் இவரும் ஒருவர். இவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அவரது மகன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். 

செந்தில்:

கவுண்டமனி-செந்தில் என்ற பெயரை கேட்டால் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு கோலிவுட் காமெடிக்கே ட்ரேட் மார்க் ஆக அமைந்தவர்கள், கவுண்டமனி மற்றும் செந்தில். இவர்கள் இல்லாமல் அன்றைய முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிக்கவே யோசிப்பர். கவுண்டமனி-செந்தில் திரையில் செய்யும் அலப்பறையை பார்க்கவே அன்றைய ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்ற காலம் எல்லாம் இருக்கிறது. அப்படி, காமெடி உலகில், ஒரு ரவுண்டு நகைச்சுவை கலைஞர் செந்தில். இவர், கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

2010ஆம் ஆண்டிற்கு பிறகு மிகவும் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான‘கிக்’படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

செந்திலின் மகன்:

என்னதான் திரையில் பெரிதாக வளர்ந்தாலும் ஒரு சில நடிகர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பெரிதும் வெளியில் கூற மாட்டார்கள். நடிகர் செந்திலும் அப்படிப்பட்டவர் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது மகன் ஒரு பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது தந்தை குறித்து, தனது தொழில் குறித்தும் பேசியுள்ளார். 

செந்திலின் மகனின் பெயர், மணிகண்ட பிரபு. இவர், தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தன்னை பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, தனது குடும்பத்தில் யாருமே படித்தது இல்லை என்றும் தான் மட்டும்தான் படித்து மருத்துவரானதாகவும் குறிப்பிடார். மேலும், தான் ஒரே ரு படத்தில் மட்டும் நடித்ததாகவும் அதன் பிறகு முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தி மருத்துவரானதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | நடிகர் செந்தில் 70 வயது பூர்த்தியானதால் சாமி தரிசனம்!

இவர், ஜனனி என்ற பெண்ணை காதலித்ததாகவும் அவர் மருத்துவராக இருந்ததாகவும்  குறிப்பிட்டார். ஜனனியின் தந்தை ஒரு மருத்துவருக்குத்தான் தனது மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்று கூறியதால், தானும் பல் மருத்துவம் படித்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடனும் இவருக்கு ஜனனியுடன் திருமணம் நடந்துள்ளது. 

ஏழைகளுக்கு சேவை…

செந்திலின் மகன் மணிகண்ட பிரபு, தன்னால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்து வருவதாகவும் தெரிவித்தார். தனது தந்தையை கம்-பேக் கொடுக்க சொல்லி ரசிகர்கள் வற்புறுத்தி வந்ததாகவும் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

நடிகர் சங்க கட்டிட விவகார் குறித்து பேசிய செந்தில்…

நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்கூட்டம் சில நாட்களுக்கு முன்னர் நடைப்பெற்றது. இதில், நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செந்திலிடம், நடிகர்களிடமே நடிகர் சங்க கட்டிடத்திற்கான நிதிய வசூல் செய்யலாமே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், இந்த கேள்வியை கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் கேளுங்கள் என்று கூறினார். 

மேலும் படிக்க | அழகு சாதன பிராண்டிற்கு அதிபதியான நயன்! 9ஸ்கின் ஆரம்ப விலை என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours