கலையரசனின் ‘கொலைச்சேவல்’
30 செப், 2023 – 12:58 IST

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரிக்கும் படம் ‘கொலைச்சேவல்’. வி.ஆர்.துதிவாணன் இயக்குகிறார். இந்த படத்தில் கலையரசன், தீபா பாலு நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பால சரவணன், வெங்கட், கஜராஜ், ஆதவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார், சாந்தன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் துதிவாணன் கூறும்போது “இது ஒரு மிகவும் அழகான காதல் கதை. அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. அதே சமயம் சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்து ஒன்றையும் இப்படம் சொல்லும். குறிப்பாக திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இதுவரை கண்டிராத வகையில் இருக்கும். கலையரசனுக்கு ஒரு திருப்பு முனையாக இந்த திரைப்படம் அமையும். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்” என்றார்.
+ There are no comments
Add yours