விஜய் டிவி புகழ் – பென்சி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!
28 செப், 2023 – 12:21 IST
விஜய் டிவியில் வெளியாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தனது காதலி பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் புகழ். அதையடுத்து தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று புகழ் – பென்சி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நடிகர் புகழ், “இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமென்றால் பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள். மகள் அல்ல எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். என் மகளே. தாயும் சேயும் நலம்” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
+ There are no comments
Add yours