விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது.
மகளை இழந்த விஜய் ஆண்டனி:
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினர் மட்டுமன்றி ரசிகர்கள், பொது மக்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 16 வயதாகும் மீரா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மீராவின் இறப்பிற்கு பிறகு விஜய் ஆண்டனி தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார்.
பட ப்ரமோஷனில் விஜய் ஆண்டனி:
விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனியை ரசிகர்கள் அனைவரும் பாராட்டினர். தன்னை நம்பி படம் எடுத்தவர்களுக்காக நிகழ்சிச்சிகளில் கலந்து கொண்ட அவரது உள்ளம் யாருக்கும் வராது எனவும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்தனர். நேற்று, ரத்தம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில், அவர் தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க | விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கான காரணம்..மருத்துவர் சொன்ன தகவல்..!
‘ஹிட்லர்’ திரைப்படம்:
முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.
ஹிட்லர் திரைப்படத்தை ஆக்ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இப்படம் இருக்கும். ஹிட்லர் ஒரு மனிதனாக இருக்கலாம் ஆனால் இன்று வரலாற்றில் அந்தப் பெயர் சர்வாதிகாரத்தின் அடையாளம். அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஹிட்லர் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க | மகள் இறந்து 10 நாட்களில் பட ப்ரமோஷன்..! விஜய் ஆண்டனியை பாராட்டிய ரசிகர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours