நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி செப்டம்பர் 14-ம் தேதிக்குள் 103.5 டி.எம்.சி நீரைத் தமிழ்நாட்டுக்குக் கர்நாடகா தந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 38.4 டி.எம்.சி மட்டுமே தந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மழை பெய்யும்போது வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க உபரிநீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட்டுக் கணக்குக் காட்டும் கர்நாடகா, இடர்ப்பாடான காலங்களில் கிடைக்கும் நீரை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை. இதற்குத் தமிழ்நாடு அரசும் நீதிமன்றம் வழியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்குரிய காவிரிநீரைத் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சித்தார்த் நடிப்பில், S.U.அருண் குமாரின் இயக்கத்தில் உருவான “சித்தா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இதையொட்டி கர்நாடகா பெங்களூரில் நடந்த இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் நடிகர் சித்தார்த்.
+ There are no comments
Add yours