நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் – பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

Estimated read time 1 min read

நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் – பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

27 செப், 2023 – 13:41 IST

எழுத்தின் அளவு:


Nayan,-Vicky-Sons-First-Birthday-:-wishes-from-celebrities-and-Fans

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலம் கடந்த வருடம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றனர். அக்குழந்தைகளுக்கு உயிர் ருட்ரோநீல், உலக் டைவிக் எனப் பெயரிட்டு செல்லமாக உயிர், உலக் என அழைத்து வருகின்றனர். அக்குழந்தைகள் இன்று தங்களது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றன.

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் அவர்களது குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, “என் முகம் கொண்ட, என் உயிர் என் குணம் கொண்ட என் உலக்,” எனது அன்பான பையன்களின் புகைப்படங்களுடன் இப்படிப் பதிவிட வேண்டும் என நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை டியர் மகன்களே… உயிர் ருட்ரோநீல், உலக் டைவிக்… இந்த வாழ்க்கையில், எதையும்… எல்லாவற்றையும் தாண்டி.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உங்கள் இருவர் மீதும் அப்பாவும், அம்மாவும் அன்பு வைத்திருக்கிறோம்.

எங்கள் வாழ்க்கையில் வந்து எங்களை மகிழ்ச்சியாக்கியதற்கு உங்கள் இருவருக்கும் நன்றி… நீங்கள் அனைத்து நேர்மறையானவற்றையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வந்துள்ளீர்கள். இந்த ஒரு முழு ஆண்டு வாழ்நாள் முழுவதும் ரசிக்க வேண்டிய தருணங்களால் நிரப்பப்பட்டுள்ளது. உங்கள் இருவருரையும் நேசிக்கிறோம்.

நீங்கள்தான் எங்களது உலகம், எங்களது ஆசீர்வாதமான வாழ்க்கை,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

பல சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மகன்களின் முதல் பிறந்தநாளில் அவர்களின் ஒரு வயது போட்டோவை முதன்முறையாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours