Amudhavum Annalakshmiyum September 28 Episode Update | அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவின் கையில் சிக்கிய ஆதாரம்.. மாயாவுக்கு தயாராகும் ஆப்பு

Estimated read time 1 min read

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் விக்னேஷ் போனிலிருந்து மாயாவுக்கு போன் அடிக்க, மாயா போனின் ரிங் சத்தம் கேட்கிறது. மாயா ஹலோ என பேச செந்தில் எதுவும் பேசமால் போனை கட் செய்ய, மாயா மீண்டும் போன் செய்கிறாள். 

மேலும் படிக்க | Iraivan Review: இறைவன் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை மிரட்டியதா? இதோ முதல் விமர்சனம்

 

அமுதா செந்திலிடம் இதுக்கும் மாயாவுக்கும் தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன் உடனே போனை ஆப் பண்ண சொல்கிறாள். மாயா பழனியிடம் போன் வந்த விஷயத்தை சொல்ல உமா உன்னை நம்ப முடியலையே என சந்தேகப்படுகிறாள். மாயா உங்களை தான் நம்பி இருக்கேன் என சொல்ல, பழனி நாங்க பார்த்துக்குறோம் என சொல்கிறான். அடுத்து பழனியும், உமாவும் விக்னேஷை பார்க்க ஆஸ்பிடலுக்கு வர பெட்டில் விக்னேஷ் இல்லாமல் இருக்கிறான். 

நர்ஸ் தனக்கும் எதுவும் தெரியவில்லை என சொல்ல, உமாவும் பழனியும் நர்சை திட்டுகின்றனர். பழனி அவர் கையிலிருந்த போனை கேக்க, அவரை இங்க சேர்த்த அமுதா தான் போனை எடுத்துகிட்டு போயிருக்காங்க என சொல்ல இருவரும் ஷாக் ஆகின்றனர். 

மறுபக்கம் அமுதா விக்னேஷை தனியாக ஒரு இடத்தில் வைத்து ட்ரீட்மெண்ட்க்கு ஏற்பாடு செய்கிறாள். பழனி மாயாவிடம் விக்னேஷை ஆஸ்பிட்டலில் சேர்த்தது அமுதா தான் என சொல்கிறான். 

அவனை எங்க அமுதா கொண்டு போயிருக்கான்னு நான் கண்டுபிடிக்கிறேன் என சொல்ல, உமா மாயாவிடம் நாம உடனே வீட்டுக்கு போயி அமுதா ரூம்ல அந்த போன் இருக்குதான்னு பார்க்கலான் என சொல்லி அழைத்து செல்கிறாள்.

மாயா அமுதா ரூமில் போனை தேடிக் கொண்டிருக்க, அமுதா வந்து என் ரூமுல என்ன பண்ற என கேக்க, என் கம்மல் திருகாணி காணோம் அதை தான் தேடி வந்தேன் என மாயா பதில் சொல்ல, உன் கம்மல் திருகாணி என் ரூமுக்கு எப்படி வரும் என கேட்க, மாயா இது என் வீடு என சொல்லி நகர்கிறாள். மாயா சென்ற பிறகு அமுதா செந்தில் போடோவின் பின்னால் இருந்து போனை எடுக்கிறாள். 

அதனை தொடர்ந்து அன்னம், மாணிக்கம், செந்தில், அமுதா அனைவரும் குல தெய்வ கோயிலுக்கு வர அன்னலட்சுமி நம்ம குலதெய்வத்தை மறந்துட்டோம், இங்க தான் உனக்கு கல்யாணம் பண்ணனும்னு வேண்டிகிட்டேன் அது நடக்கவே இல்லை என சொல்கிறாள். அன்னம் அமுதா செந்திலிடம் இரண்டு பேரும் ஜோடியா அய்யனாருக்கு விளக்கேத்தி எங்களுக்கு வந்த சோதனையை நீ தான் நீக்கனும்னு வேண்டிக்கோங்க என சொல்கிறாள். 

மாயாவும், உமாவும் அங்கு வர மாயா அன்னமிடம் நான் நிக்க வேண்டிய இடத்துல அவளை நிப்பாட்டி வச்சிருக்கீங்க என சொல்ல, நீ என் மருமகளா ஆகவே முடியாது, என் மருமக அமுதா மட்டும் தான் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours