இறுகப்பற்று: `8 வருஷம் தூரமா போயிட்டேன்; அந்த சம்பவம் என்னைக் கொன்னுருச்சு’- கலங்கிய யுவராஜ் தயாளன் | Irugapatru Movie director Yuvaraj Dhayalan emotional speech at press meet

Estimated read time 1 min read

தற்போது இறுகப்பற்று படத்தினை இயக்கியிருக்கிறார். நடிகர்கள் விக்ரம் பிரபு, `மாநகரம்’ ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சான்யா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அக்டோபர் 6-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் யுவராஜ் தயாளன் நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

இறுகப்பற்று

இறுகப்பற்று

“ஒரு விஷயம் என்னை எட்டு வருஷமா தூங்க விடல. அதைப் பத்திதான் இந்த மேடையில பேசனும்னு நினைச்சேன். எலி படத்தோட பிரஸ் மீட் இங்கத்தான் நடந்துச்சு. வழக்கமா ஒரு பிரஸ் ஷோ முடிஞ்சா எல்லோரு வெளிய வருவாங்க ஆனா அன்னைக்கு யாரும் வெளிய வரல. அப்போ நானும் வடிவேல் அண்ணாவும் உள்ள வந்தோம். யாருமே எங்ககிட்ட எந்த ஒரு கேள்வியும் கேக்கல. எல்லோரு அமைதியா இருந்தாங்க. வடிவேல் அண்ணா, `படம் எப்படி இருந்துச்சுனு கேளுங்க தம்பி’னு சொன்னாரு.  நானும் கேட்டேன். அப்போது அங்க ஒரு மயான அமைதியா இருந்துச்சு. அந்த மாதிரி ஒரு அமைதியை ஒரு சில படத்துக்கு மட்டும்தான் பார்த்திருக்கேன்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours