தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
தற்போது தெலுங்கில் அவரது நடிப்பில் ‘குமாரி ஸ்ரீமதி’ என்ற தொடர் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த தொடர் வெளியாக உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நித்யா மேனன், “தமிழ் நடிகர் தன்னை துன்புறுத்தியதாக’ கூறியதாக சமூக வலைதளங்களில் சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர்.
+ There are no comments
Add yours