ராஷ்மிகாவை இயக்கும் சின்மயி கணவர்
26 செப், 2023 – 14:10 IST
பிரபல பாடகி சின்மயின் கணவர் மற்றும் நடிகர், இயக்குனர் ராகுல் ரவீந்திரன். இவர் மாஸ்கோவின் காவேரி, வணக்கம் சென்னை, தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘சில் லா சோ’, ‘மன்மததுடு’ என இரண்டு படங்களை இயக்கினார். இந்நிலையில் அடுத்து இவர் ஒரு படம் இயக்க உள்ளார். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். இப்படத்தை ஜி.ஏ2 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஆயுத பூஜை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் .
+ There are no comments
Add yours