அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல்.
அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் நேற்றைய வாத்தியார் செந்திலை பார்க்க வீட்டிற்கு வந்திருக்க அப்போது மாயா அமுதாவை கோர்த்து விடுவது போல் பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வாத்தியார் வெளியே சென்றதும் அன்னலட்சுமி பெருக்குமாறை எடுத்து மாயாவை அடிக்க போவைத்து மட்டுமில்லாமல் நீ என் மருமகளா என கோபப்படுகிறாள். அடுத்து மாயா அன்னலட்சுமியிடம் அமுதா கல்யாணம் ஆகலேன்னு ஸ்கூல்ல சொல்லிருக்கா இது நியாயமா என கேக்க, அன்னம் என் மருமக தியாகிடி என பாராட்டி பேசுகிறாள்.
மேலும் படிக்க | விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல்
அடுத்ததாக இரவு உமாவும் மாயாவும் தூங்கிக் கொண்டிருக்க, உமா ஏதோ சத்தம் வருவதாக மாயாவை எழுப்பி ஜன்னலை பார்க்க கருப்பு உருவம் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து மாயாவை பார்க்க சொல்ல, மாயாவும் பார்த்து விட்டு அலறுகிறாள்.
பிறகு மாணிக்கமும் அன்னலட்சுமியும் கருப்பு போர்வை போர்த்திக் கொண்டு முகத்தில் மாஸ்க் மாட்டியபடி இருவரையும் பயமுறுத்தியது தெரிய வருகிறது. மாணிக்கம் வேஷத்தை கலைத்து விட்டு அமுதாவிடம் உன் மாமா ஆவியா வந்துருப்பாரும்மா என சொல்ல, மாயா இங்க பேய் இருக்கா என பயப்படுகிறாள். மாயாவும் உமாவும் மீண்டும் தூங்க செல்ல, மாணிக்கம் மீண்டும் வேஷமிட்டு பயமுறுத்துகின்றனர். மாயாவும், உமாவும் தூங்காமல் ஹாலில் பயத்துடன் அமர்ந்திருக்க, மாணிக்கம் அவர்களிடம் ஒழுங்கா வீட்டை விட்டு ஓடிருங்க என சொல்கிறார்.
அதனை தொடர்ந்து பள்ளிக் கூடத்தில் அமுதாவும் செந்திலும் கிளாஸ் முடிந்து ஒன்றாக நடந்து வர, மாயா டிபன் கேரியருடன் வர செந்தில் அவளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க, ஹெ.எம் மகன் வருகிறார். செந்தில் அவன் முன் சமாளிக்க வாத்தியார் அமுதாவை இத்தனை நாள் ஸ்கூலுக்கு வராம எங்க போனீங்க என திட்டுகிறார். மாயா அவனை சாப்பிட அழைக்க செந்தில் வேறு வழி இல்லாமல் அவள் பின்னால் செல்கிறான்.
மாயா செந்திலுக்கு சாப்பாடு பரிமாற அதைப் பார்த்து அமுதா வேதனைப்பட அமுதாவுடன் படிக்கும் மாணவர்கள் என்ன பிரச்சனை ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என கேட்கின்றனர். இதனை தொடர்ந்து அமுதா மாணவர்களிடம் தனக்கு கல்யாணம் ஆகி விட்டதாகவும், செந்தில் தான் தன் கணவர் எனவும், மாயா தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுவதாகவும் சொல்ல மாணவர்கள் நாங்க மாயாவை பார்த்துக்குறோம், நீங்க கவலைப்படாதீங்க என ஆறுதல் சொல்லிவிட்டு மாயா வர அவள் மேல் பெட்ஷீட்டை போர்த்தி அனைவரும் சேர்ந்து அடி வெளுத்தெடுக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | தனுஷின் கேப்டன் மில்லர்.. வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய லைகா, டிசம்பர் 15 ரிலீஸ்
அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours