ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராம் மற்றும் சீதா படுத்து தூங்க கொசுக்கடியில் ராம் தூக்கம் வராமல் தவிக்க சீதா அவனுக்காக தூங்காமல் விசிறி வைத்து விசிறி கொண்டு இருக்கிறாள். திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த ராம் நீ தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க படுத்து தூங்கு என்று சொல்ல பிறகு சீதா நீங்க தூங்குங்க பாஸ் என்று சொல்லி பாட்டு பாடி அவனை தூங்க வைக்கிறாள். மறுநாள் காலையில் சீதா கோலம் போட்டு இருக்க அக்கம் பக்கத்தினர் வந்து உன்னுடைய குரலும் சூப்பர் கோலமும் சூப்பர் என்று கூறுகின்றனர்.
மேலும் படிக்க | மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?
புருஷனுக்கு இப்படி தாலாட்டு பாடி தூங்க வச்சா அவன் உன் பின்னாடி தான் சுத்திக்கிட்டு இருப்பான் என்று கூறுகிறார்கள். இதையெல்லாம் கேட்டு சீதா வெட்கப்பட புருஷனுக்கு தாலாட்டு பாடுற சரி உன் பிள்ளைக்கு எப்போ தாலாட்டு பாட போற என்று கேட்க இன்னும் வெட்கப்பட்டு உள்ளே ஓடி விடுகிறாள். இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட ராம் குழந்தைக்கு தாலாட்டு பாட நான் ரெடி நீ ரெடியா என கேட்டு இன்னும் வெட்கப்பட வைக்கிறான். மறுபக்கம் சேதுவும் சுபாஷூம் ராமை தேடி அலைய ஒரு தெருவில் தண்ணீர் கேன் கொண்டு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
நீ இல்லாம அந்த வீடு நல்லா இல்ல வீட்டுக்கு வந்துடுடா என்று சொல்லி சேது கண்கலங்கி கூப்பிட ராம் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறான். உங்களால் சித்தியை மீறி அந்த வீட்ல எதுவுமே செய்ய முடியாது என்று கூறுகிறான், சித்தியை போலீஸில் சரண்டர் ஆக சொல்லுங்க என்று சொல்லி ஷாக் கொடுக்கிறான். பிறகு ராம் வீட்டுக்கு வந்ததும் எதற்கு பாஸ் இப்படி கஷ்டப்படுறீங்க பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தா தண்ணி கேன் தூக்கிட்டு வந்து போட போறாங்க என்று சொல்ல நீ இதை பணமா பாக்குற நான் உன்னுடைய நகையா பார்க்கிறேன் என்று சொல்ல சீதா நீங்க ரொம்ப பொறுப்பா மாறிட்டீங்க என்று சந்தோஷப்படுகிறாள். இங்கே வீட்டுக்கு வந்த சேது வெளியில் உட்கார்ந்து கொண்டு ராம் வராமல் நான் வீட்டுக்குள் வரமாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | 40 வயதிலும் 20 வயது வாலிபன் தோற்றம்..! சிம்புவின் இளமைக்கான ரகசியம் என்ன..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
+ There are no comments
Add yours