Actress Nithya Menen Statement On Alleged Issues In Tamil Cinema: நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் மீது குற்றம் சாட்டி இருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் யார் அந்த நடிகர் என்று கேள்லி எழுப்பி வருகின்றனர்.
நடிகை நித்யா மேனன்:
கோலிவுட் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நாயகிகளை விட, கேரளாவை சேர்ந்த மலையாள நாயகிகள்தான் அதிகம். அவர்களில் பலர், தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளனர். அப்படி பலருக்கு பிடித்த நாயகிகளுள் ஒருவராக வலம் வருபவர், நித்யா மேனன் (Nithya Menen). இவர் கடந்த 2006ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 7’ O கிளாக் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து கவனிக்கத்தக்க நடிகையாக மாறினார். இவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் (Tamil Cinema) இருந்தே இவருக்கு ரசிகர்கள் அதிகம். இவர் நடிப்பில் வெளியான ஓகே கண்மணி, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடைசியாக தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இதில் இவரது ஷோபனா கதாப்பாத்திரம் பயங்கர ட்ரெண்ட் ஆனது.
மேலும் படிக்க | விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல்
நித்யா மேனன் ஷாக்கிங் தகவல்:
இந்நிலையில் தற்போது தமிழ் நடிகர் ஒருவர் அவரிடம் அத்துமீறியதாக குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. அதில் அவர், தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனை சந்தித்தேன். ஒரு முறை படப்பிடிப்பு ஒன்றில் தமிழ் சினிமா நடிகர் ஒருவர் என்னை துன்புறுத்தினார். எனக்கு தொல்லை கொடுத்தார் என்று நேர்காணலில் கூறியிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவரகாரம் வெளியான முதல் சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. மேலும் இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் யார் அந்த நடிகர் என நித்யாவிடம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தனுஷ் உடன் மீண்டும் இணையும் நித்யா:
இதற்கிடையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்த்து தானே இயக்கும் 50வது படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இந்தியில் அறிமுகமாகிறார் நித்யா மேனன்:
அதேபோல் இந்திப் படம் ஒன்றில் கதாநாயகியாக நித்யா மேனன் அறிமுகமாகிறார். இந்தி இயக்குநர் விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் ‘மர்டர் மிஸ்டரி’ படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார். இதில் விவேக் ஓபராய், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். ஆசிஷ் வித்யார்த்தி மூத்த விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தனுஷின் கேப்டன் மில்லர்.. வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய லைகா, டிசம்பர் 15 ரிலீஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours