பிரின்ஸ் தோல்விக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் படத்தில் நடித்தார்.
அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்து வெற்றி படமாக அமைந்தது. தற்போது ரா பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், சிவகார்த்திகேயனும் இணையவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “ பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர்.முருகதாஸ் சார். எனது 23 வது படத்தில் உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களிடம் கதை கேட்ட பிறகு மகிழ்ச்சி இரட்டிப்பானது. இப்படம் எல்லா விதத்திலும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். படப்பிடிப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்” என்று பதிவிட்டு அடுத்த படம் தொடர்பான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.
Thankyou so much Siva! Glad to join with you on the next project! Let’s create some cinematic magic together! #SKxARM https://t.co/BvLw6CLjen
— A.R.Murugadoss (@ARMurugadoss) September 25, 2023
இதற்கு ஏ.ஆர்.முருகதாஸும் பதில் ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார். “ மிக்க நன்றி சிவா! அடுத்த திட்டத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி! ஒன்றாக இணைந்து சில மாயாஜாலங்களை உருவாக்குவோம்”! என்று குறிப்பிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours