ஒன்று, கதைக்களம் மாற்றியமைக்கப்பட வேண்டும் அல்லது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யாரையாவது நடிக்க வைக்க வேண்டும்… அப்படியில்லை எனில் அந்தக் கதாபாத்திரம் இறந்தது போன்றே காட்டிவிட்டு புதியதாக கதையை எடுத்துச் செல்லலாம் என்றும் பல்வேறு விதமான கமென்ட்ஸ்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்னமும் கதையை இழுத்துக் கொண்டிருக்காமல் இயக்குனர் விரைந்து கதையின் ஓட்டத்தை மாற்றி அமைத்தால் எதிர்நீச்சல் ரசிகர்கள் தொடர்ந்து அந்தத் தொடரை ரசித்துப் பார்க்க வழிவகை செய்யும்!
ஆதி குணசேகரன் கதாபாத்திரம் வேறு ஒருவர் நடித்து நீட்டிக்கப்பட வேண்டுமா அல்லது கதையின் போக்கை மாற்ற வேண்டுமா? உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
+ There are no comments
Add yours