Vishal At Mark Antony Event Talks About Small Budget Films

Estimated read time 1 min read

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழா சந்திப்பின் போது நடிகர் விஷால், சிறிய படஜெட் படங்கள் குறித்து பேசினார். அந்த வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சைக்குறியதாக மாறியுள்ளது. 

மார்க் ஆண்டனி திரைப்படம்:

விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், மார்க் ஆண்டனி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். காமெடி-டைம் ட்ராவல் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவருமே தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம், சமீபத்தில் 100 கோடி வசூலை தாண்டியது. இதையடுத்து விஷால், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், சில்க் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த விஷ்ணு பிரியா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 

கம்மி பட்ஜெட் படம் குறித்து பேசிய விஷால்..! 

மார்க் ஆண்டனி பட விழாவில் பேசிய விஷால், கண்டிப்பாக யாரும் 1 கோடி அல்லது 4 கோடியை வைத்து படம் எடுக்க வர வேண்டாம் என்று பேசினார். பெரிய பட்ஜெட் படங்களுக்குதான் திரையரங்குகளில் முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் அதனால் கையில் 1 கோடி, 4 கோடி வைத்திருந்தால் எங்காவது கடற்கரை பக்கம் பண்ணை வீடு கட்டி சந்தோஷமாக இருந்து கொள்ளுமாறும் கூறினார். ஏற்கனவே 120 படங்களுக்கும் மேல் திரைக்கு வராமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

விஸ்வரூபம் எடுத்த விஷாலின் பேச்சு..! 

நடிகர் விஷால், மார்க் ஆண்டனி பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரசிகர்கள் பலர் விஷாலுக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். “நடிகர் சங்கத்தில் இருந்து கொண்டு அவரே இப்படி பேசலாமா..” என்று ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | போட்டோஷூட் நடத்திய நடிகர் விஷால் – லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

ஆதரவு தெரிவித்த பிரபல இயக்குநர்..

தர்மதுரை, மாமனிதன், கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் சீனு ராமசாமி. இவர், விஷாலின் கருத்தை ஆதரிப்பதாக தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “சிறு படங்களுக்கு இங்கே நியாயமே இல்லை..” என்று கூறியுள்ளார். 

“நடிகர் விஷால் சொல்வது உண்மை” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், “சிறு படங்களுக்கு இங்கே  நியாயம் இல்லை. சிறு படங்களை வெளியிட யார் உண்டு. முதல் மூன்று நாள் அவகாசம் தான் சிறுபடங்களுக்கு தியேட்டரில் முதல் ஷோ கூட்டமில்லை எனில் தூக்கப்படும். தியேட்டர் வியாபாரம் பெரிய படங்களுக்கு சாதகமாக வைத்து கொண்டு அதில் சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம்.  பல தியேட்டரில் இங்கு சைக்கிள் பார்க்கிங்கே இல்லை அப்புறம் சின்ன படத்தை யார் வாழ விடுவார்கள்.?” என்று காட்டமாக கேட்டுள்ளார். 

மேலும் படிக்க | பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யும் விஷால்..! எப்போ கல்யாணம் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours