ஆனால், சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் சேலம் மாவட்டப் பகுதியை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் தான் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியை நோக்கி நகர்ந்திருக்கிறது, மாரியின் கேமரா.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படம் படமாக்கப்பட்டு வருகின்றது. நேற்று துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், ‘மணத்தி கணேசன்’ என்ற கபடி வீரரின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது என்ற பேச்சுகள் எழுந்தன. யார் இந்த மணத்தி கணேசன். தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்த இவர், டெல்லியில் அர்ஜுனா விருது வென்ற கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
“தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீ வைகுண்டத்திற்கும் திருச்செந்தூருக்கும் இடையே அமையப் பெற்ற குக்கிராமம் தான், மணத்தி. சாதாரண ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கணேசன். இவரின் தந்தை பெருமாள், தாயின் பெயர் மங்களம். இவருக்கு மொத்தம் நான்கு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர். அந்தக் காலத்தில் மணத்தியில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருந்ததால், மேற்படிப்புக்கு மூன்றரை கிலோமீட்டர் நடந்து சென்று கல்விகற்க வேண்டிய சூழல்தான் இருந்தது. தன்னுடைய 8-9 வயதில் கபடி விளையாடத் தொடங்கிய இவருக்கு, கபடி விளையாட்டில் ஊரின் பெயரே அடையாளமாக மாறிவிட்டது.
+ There are no comments
Add yours