கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டார். இதே போன்று டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா மற்றும் டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொண்டார். இன்று காலை 10 மணிக்கு மணமகளுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சியுடன் இன்றைய திருமண சடங்குகள் தொடங்கியது. பிற்பகல் ஒரு மணிக்கு மணமகனுக்கு தலைப்பாகை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை மணமகனின் சகோதரிகள் செய்தனர்.
மணமகனை அழைத்து வர பேண்ட் வாத்தியங்கள் படகுகளில் சென்றது. தாஜ் லேக் பேலஸ் ஹோட்டலில் இருந்து தனி படகு மூலம் மணமகன் ஊர்வலமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். படகு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மணமகனின் முகமும் மலர்களால் மறைக்கப்பட்டிருந்தது. மற்றொரு படகில் பேண்ட் வாத்தியங்கள் ஒலித்தபடி மணமகனை பின் தொடர்ந்து வந்தது. திருமணம் லீலா பேலஸ் ஓட்டலில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இருவரும் மாலை மாற்றி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மாலை 6.30 மணி வரை திருமணத்திற்கு பிந்தைய சடங்குகள் நடந்தது. மாலை 8 மணிக்கு பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆசியன், பஞ்சாபி, வட இந்தியா, இத்தாலி, ஜப்பானிய உணவு வகைகள் திருமணத்தில் பரிமாறப்பட்டதாக விருந்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்
+ There are no comments
Add yours