தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்களும் நடிகர்களும் காதலில் விழுவதும் அந்த காதல் ஒன்று திருமணம் அல்லது காதல் முறிவில் முடிவதும் சகஜமான ஒன்றாக உள்ளது. ஜெமினி கணேசன் சாவித்ரியில் ஆரம்பித்து தற்போது சமந்தா-நாக சைதன்யா வரை பலரது காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மோசனமான நிலையில் முடிந்துள்ளன. இவை, சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறியுள்ளன.
கமல்ஹாசன்-கெளதமி:
‘உலக நாயகன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன், காதல் மன்னனாகவும் திகழ்ந்தவர். சிறு வயது முதல் சினிமாவிலேயே வாழ்ந்து வளர்ந்து வரும் இவர் பல காதல், திருமண வாழ்க்கைகளையும் சந்தித்து விட்டார். திருமண வாழ்வில் இருந்த போதே இவர் பல நடிகைகளுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். நடிகர் கமல்ஹாசனும் கெளதமியும் பல வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, 2016ஆம் ஆண்டு இவர்கள் தங்கள் உறவை முறித்து கொண்டனர். இது, ரசிகர்களிடையே பெரும் பேசு பொருளாக மாறியது.
மேலும் படிக்க | பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த அனிருத்..! விரைவில் திருமணமா..?
நயன்தாரா-பிரபு தேவா:
இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு கரம் பிடித்தவர் நயன்தாரா. இந்த தம்பதியினருக்கு உயிர் மற்றும் உலக் என்று இரட்டை குழந்தைகள் உள்ளனர். நயன்தாரா, பிரபு தேவா இயக்கத்தில் உருவாகியிருந்த ‘வில்லு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அந்த சமயத்தில் பிரபு தேவாவிற்கும் நயன்தாராவிற்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பிரபு தேவாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில் அவர் நயன்தாரா மீது காதல் வயப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவருக்காக நயன்தாரா கையில் டாட்டூ குத்திக்கொண்டாகவும் கூறப்பட்டது. ஒரு வழியாக இவர்களின் காதல் உறவு 2011ஆம் ஆண்டிற்கு பிறகு முடிவிற்கு வந்தது.
சிம்பு-நயன்தாரா:
ரசிகர்களால் சினிமாவில் அதிகம் ரசிக்கப்பட்ட ஜோடி, நயன்தாரா-சிம்பு. இவர்கள் வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் சேர்ந்து நடித்தனர். வல்லவன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இருவரும் காதல் வயப்பட்டனர். பின்னர், சில காரணங்கினால் பிரிந்து விட்டனர். நயன்தாராதான் முதலில் இந்த காதலை முறித்துக்கொண்டதாக கூறப்பட்டது. சிம்பு, அதன் பிறகு ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டார். ஆனால், அதுவம் பிரிவில் முடிந்தது. சிம்பு, எப்போது “லூசு பெண்ணே” பாடலை பாடினாலும் அதை நயன்தாராவை நினைத்துதான் பாடுகிறார் என ரசிகர்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். அவரது படங்களின் போஸ்டர் அல்லது ட்ரைலர்கள் வெளியாகும் போதும் அதை 9 என்ற எண்ணுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களையும் போட்டு வருகின்றனர்.
அனிருத்-ஆண்ட்ரியா:
தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அனிருத். இவரும் ஆண்ட்ரியாவும் 3 பட ரிலீஸிற்கு பிறகு காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அனிருத்திற்கு வயது 19, ஆண்ட்ரியாவிற்கு வயது 24. இது குறித்து அனிருத்தே, சில நேர்காணல்களில் பேசியுள்ளார். வயது வித்தியாசம் காரணமாக இந்த காதல் பிரிவில் முடிந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், பாடகி சிஜியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டது. இதை, யாரோ தனது ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்து வெளியிட்டு விட்டதாக சுஜி தெரிவித்தார். இன்று வரை சுஜி லீக்ஸ்-ம், அனிருத்-ஆண்ட்ரியாவின் காதலும் பேசு பொருளாக உள்ளது.
சமந்தா-நாக சைதன்யா:
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையாக விளங்குபவர், சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ஒன்றாக சில படங்களில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்களின் காதலும் 2017ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெறுவதாக தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இவர்களின் காதலை கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை அளித்தது. இன்றளவும் சில ரசிர்கள், இவர்கள் மீண்டும் ஒன்று சேர மாட்டார்களா என்று காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | த்ரிஷா to சாய் பல்லவி…இன்னும் திருமணம் செய்து கொள்ளாத தமிழ் நடிகைகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours