சென்னை: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் – கங்கனா நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ‘ரிலீஸ்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் பாகத்தையும் இயக்குநர் பி.வாசுவே இயக்கியிருக்கிறார். எம்.எம்.கீரவாணி படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ‘17 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணு கங்கா, தன்னைத் தானே சந்திரமுகியா நெனைச்சுட்டு அந்த ஆட்டம் ஆடுச்சு. இப்போ ஒரிஜினல் பீஸே வந்து இறங்கியிருக்கு. என்ன ஆட்டம் ஆடப்போகுதோ…’ என்ற வடிவேலு வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘பேய் பங்களா’ செட் அப் தொடர்ந்து வரும் வடிவேலுவின் சிரிக்க வைக்காத காமெடி, ‘வேட்டையன்’ இன்ட்ரோ, சண்டைக் காட்சி, திகிலுக்கான முயற்சி என பார்த்துப் பழகிய காட்சிகளால் புதிதாக எதுவுமில்லை.
+ There are no comments
Add yours