Akshay Kumar Doing Aqua Work Out Viral Video Watch Here

Estimated read time 1 min read

இந்தி திரையுலகினர் மட்டுமன்றி தமிழ்நாட்டில் உள்ள சில ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக விளங்குபவர், அக்ஷய குமார். இவர், தண்ணீருக்குள் இருந்தவாறு உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கிட்டத்தட்ட 30 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர், அக்ஷய் குமார். இவர், இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகராக உள்ளார். 

அக்ஷய் குமார்:

தமிழில் வெளியாகும் படங்கள் இந்தியில் ரீ-மேக் ஆவது வழக்கமாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருந்த ‘காஞ்சனா’ படம், கடந்த 2020ஆம் ஆண்டு லக்ஷமி என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதில் ஹீரோவாக நடித்தில் இருந்து அக்ஷய் குமார் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். ஆனால், இந்த படம் வசூலிலும் விமர்சனத்திலும் பயங்கர அடி வாங்கியது. இதையடுத்து, தமிழில் வெளியான ராட்சசன் படத்தின் இந்தி ரீ-மேக் ஆன ‘கட்புட்லி’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வெற்றியை அவருக்கு தேடி தந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகியிருந்த சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீ-மேக்கிலும் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. 

தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்சி:

திரை பிரபலங்கள் பலரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துபவர்களாக உள்ளனர். எத்தனை வயதை கடந்தாலும் ஜிம்மிற்கு செல்வது, தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற விஷயங்களை அவர்களை வயதான தோற்றத்தில் இருந்து காப்பாற்றுகிறது. 

நடிகர் அக்ஷய் குமார் அப்பேற்பட்ட ஃபிட்னஸ் ஃப்ரீக்காக இருக்கிறார். அவர், தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியாேவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தண்ணீருக்கு அடியில் வர்க் அவுட் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

மேலும் படிக்க | கனடா குடிமகன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அக்ஷய் குமார்

ஆக்வா வர்க் அவுட்..

தண்ணீருக்கு அடியில் இருந்தவாறு செய்யும் உடற்பயிற்சிகளுக்கு பெயர், ஆக்வா வர்க்-அவுட். இது, உடல் தசைகளை வலுப்படுத்தவும் கொழுப்பை குறைக்கவும் செய்கிறது. 

அக்ஷய் குமார், தண்ணீருக்குள் இருந்தவாறு டம்புல்ஸ் தூக்குவது, Ab workout போன்ற ஆக்வா வர்க் அவுட்ஸ்களை செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

நெட்டிசன்களின் நக்கல்..

அக்ஷய் குமாரின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், “56 வயசுல இதெல்லாம் தேவையா கோபி..” என்பது போல நக்கலாக சில கமெண்டுகளை பதிவிட்டு உள்ளனர். இன்னும் சிலர், இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இவர் மேற்கொள்ளும் இந்த முயற்சியினை பாராட்டு வருகின்றனர். 

ஓஎம்ஜி 2:

கடந்த சில வருடங்களாக வெளிவந்த அக்ஷய் குமாரின் படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில், அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம், ஓஎம்ஜி 2. பாலியல் கல்வியை கடவுளின் வாயிலாக போதிக்கும் படமாக இது அமைந்திருந்தது. ஆனால், இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் இதை 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், படத்தில் டீன் ஏஜ் வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி குறித்து போதிக்கும் வகையில் கதை எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்ததற்காக நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் வருத்தம் தெரிவத்திருந்தார். 

மேலும் படிக்க | அம்மாடி.. இவ்வளவு சம்பளமா? பாலிவுட் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours