திருமணத்தில் 200 விருந்தினர்களும், 50 வி.ஐ.பி.க்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். டிசைனர் மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடையை பரினிதி சோப்ரா திருமணத்தின் போது அணிந்துகொள்ள இருக்கிறார். இதர சடங்குகளுக்குத் தனது உறவினரும், டிசைனருமான பவன் சச்சிதேவ் வடிவமைத்த ஆடைகளை அணிந்து வருகிறார்.
பரினிதி சோப்ராவும், ராகவ்வும் வெளிநாட்டில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்கள் படிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்து தொடர்பிலிருந்தனர். பரினிதி சோப்ரா படப்பிடிப்புக்காக பஞ்சாப் சென்றார். அங்கு ராகவ் அவரைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்தே இருவரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தனர். இருவரும் முதல் முறையாகக் கடந்த மார்ச் மாதம் மும்பை உணவகம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்தபோதுதான் பத்திரிகையாளர்கள் கண்ணில் பட்டனர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து ஐபிஎல் போட்டிகளைக் கண்டுகளித்தனர். மே மாதம் இருவருக்கும் டெல்லியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
+ There are no comments
Add yours