சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் – Samuthirakani next film Thiru Manickam

Estimated read time 1 min read

சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’

21 செப், 2023 – 14:09 IST

எழுத்தின் அளவு:


Samuthirakani-next-film-Thiru-Manickam

ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, வண்ணஜிகினா, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி தற்போது இயக்கி வரும் படம் ‘திரு.மாணிக்கம்’. இதில் கதை நாயகனாக சமுத்திரகனி நடிக்கிறார். நாடோடிகள் படத்தில் அவர் அறிமுகபடுத்திய அனன்யா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.

படம் பற்றிய இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியதாவது: ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா, அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்ற கேள்விகளோடு இந்தப் படம் தொடங்குகிறது. கதையின் நாயகன் மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் சொந்த பந்தங்களே தடுக்கிறது. கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும், இவர்கள் எல்லோரையும் தாண்டி மாணிக்கத்தின் மனசாட்சியும் அவனைத் துரத்துகிறது. இந்தப் போராட்டத்திலிருந்து மாணிக்கம் எப்படித் தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தைச் செய்கிறார் என்பதுதான் படத்தின் சாராம்சம். என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours